• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்  | US Open: Iga Swiatek marches into quarters

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்  | US Open: Iga Swiatek marches into quarters
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னர், அலெக்ஸ் டி மினார், லோரென்சோ முசெட்டி உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் 23-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்​ளிக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். கால் இறுதி சுற்​றில் ஜன்​னிக் சின்​னர், 10-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லோரென்சோ முசெட்​டியை எதிர்​கொள்​கிறார். லோரென்சோ முசெட்டி 4-வது சுற்​றில் 6-3, 6-0, 6-1 என்ற செட் கணக்​கில் 44-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் ஜேமி முனாரை தோற்​கடித்​தார்.

8-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் 435-ம் நிலை வீர​ரான சுவிட்​சர்​லாந்​தின் லியாண்ட்ரோ ரீடியை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். கால் இறுதி சுற்​றில் அலெக்ஸ் டி மினார், கனடா​வின் பெலிக்ஸ் ஆகர் அலி​யாசி​முடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார். 25-ம் நிலை வீர​ரான பெலிக்ஸ் ஆகர் அலி​யாசிம் 4-வது சுற்​றில் 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 15-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவை வீழ்த்​தி​னார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப், 23-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசாக​வுடன் மோதி​னார். இதில் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் கோ கோ காஃபை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார். கால் இறுதி சுற்​றில் நவோமி ஒசா​கா, செக் குடியரசின் கரோலினா முச்​சோ​வாவுடன் மோதுகிறார்.

11-ம் நிலை வீராங்​க​னை​யான கரோலினா முச்​சோ​வா, 4-வது சுற்​றில் 6-3, 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்​கில் 27-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்டா கோஸ்ட்​யுக்கை வீழ்த்​தி​னார். 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்​கில் 13-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் கேத்​ரினா அலெக்​சாண்ட்​ரோ​வாவை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

கால் இறுதி சுற்​றில் இகா ஸ்வி​யாடெக், அமெரிக்​கா​வின் அமண்டா அனிசிமோ​வாவுடன் மோதுகிறார். 8-ம் நிலை வீராங்​க​னை​யான அமண்டா அனிசிமோவா 4-வது சுற்​றில் 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் 18-ம் நிலை வீராங்​க​னை​யான பிரேலிலின்​ பீட்​ரிஸ்​ ஹடாட்​ மையா​வை தோற்​கடித்​தார்​.



Read More

Previous Post

குழந்தைகளின் கை, தலையை கடித்த எலி! அரசு மருத்துவமனை ICU–ல் நடந்த அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

Next Post

இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு | 600 people booked to buy Tesla cars in India

Next Post
இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு | 600 people booked to buy Tesla cars in India

இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு | 600 people booked to buy Tesla cars in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin