• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு | City Union Bank have 50 percent branches in rural areas President Draupadi Murmu

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு | City Union Bank have 50 percent branches in rural areas President Draupadi Murmu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு பாராட்டு தெரி​வித்​தார்.

சிட்டி யூனியன் வங்​கி​யின் 120-வது ஆண்டு நிறைவு​ விழா சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு தலைமை விருந்​தின​ராக பங்​கேற்று தொடங்கி வைத்​து, வங்கியின் ஆண்​டு மலரை வெளி​யிட்​டார்.

தொடர்ந்து விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நம்​நாட்​டின் வளர்ச்​சிக்கு வங்​கி​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன. வங்​கி​கள் பங்​களிப்பு நிதி பரிவர்த்தனையோடு மட்​டும் நிற்​காமல் பல்​வேறு வகை​களில் விரிவடைந்து வரு​கின்​றன.

இதுத​விர நாட்​டின் நிலை​யான வளர்ச்​சிக்​கும் தூண்​டு​கோலாக உள்​ளன. வளர்ந்து வரும் இந்​தி​யா​வில் வங்கி வசதி​கள் குறை​வாக உள்ள ஊரகப் பகு​தி​களில்​தான் அதிக மக்​கள் வசிக்​கின்​றனர். சிட்டி யூனியன் வங்​கி​யின் 50 சதவீத கிளை​கள் ஊரகப்​ பகு​தி​களில் இருப்பது பாராட்டத்தக்கது. ஒருங்​கிணைந்த நிதி வளர்ச்​சிக்​காக பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. பிரதமரின் ஜன்​தன் யோஜனா திட்​டம் மூலம் 56 கோடி பேருக்கு வங்​கிக் கணக்கு தொடங்​கப்​பட்​டது. நேரடி நிதி​யுத​வி, மானி​யம் உட்பட பல்​வேறு நலத்​திட்​டங்​கள் இடையூறு இன்றி பயனாளி​களுக்கு செல்​வதன் மூலம் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் வளர்ச்சி பெற்​றுள்​ளது.

விவ​சா​யிகள் முன்​னேற்​றம், ஊரகப் பொருளா​தார மேம்​பாடு ஆகிய​வற்​றுக்​கு​தான் வங்​கி​கள் முன்​னுரிமை அளிக்க வேண்​டும். சரி​யான நேரத்தில் கடன், நிதி கையாள்​வது பற்றிய அறி​வு, விவ​சா​யம் குறித்த நவீன தொழில்​நுட்​பம் ஆகியவற்றை அளிப்​ப​தன் மூலம் வேளாண் தொழிலை நிலை​யான லாபம் மற்​றும் வளர்ச்​சிப் பாதைக்கு கொண்டு செல்லமுடி​யும்.

அதே​போல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​களும் பொருளா​தார வளர்ச்​சிக்கு மிக​வும் உதவு​கின்​றன. அந்த நிறு​வனங்​கள் வளர்ச்​சி​யின் இயந்​திர​மாக மாறு​வதற்கு வங்​கி​கள் உதவ வேண்​டும். பிரதமரின் சாலை​யோர வியா​பாரி​கள் நலத்​திட்​டம் மூலம் அவர்​களின் நிதி​ஆதா​ரம் மேம்பட்​டுள்​ளது. 2030 மார்ச் மாதம் வரை இந்த திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. முந்​தைய ஆண்​டு​களை போல் அல்​லாமல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் வங்கி சேவை​கள் இன்று ஊரகப் பகு​தி​களில் உள்ள சிறு விவ​சா​யிகள், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு மிகுந்த பலனளிக்​கிறது. நமது வங்​கி​கள் பின்​தங்​கிய மற்​றும் புறக்​கணிக்​கப்​பட்ட மக்​களுக்கு சிறப்பு நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். விவசாயிகளுக்கு எளி​தாக கடன் கிடைக்க வழி​செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்கு தனி​யார் வங்​கி​கள் முக்​கிய பங்​காற்றி வரு​கின்​றன. இந்​திய அட்​ட​வணை வர்த்தக வங்​கி​கள், தங்​களின் சொத்து தரத்​தில் மிகப் பெரிய முன்​னேற்​றத்​தைப் பதிவு செய்​துள்​ளன. 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்​டில் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. 18 ஆண்​டு​களுக்கு பிறகு நீண்​ட​கால கடன் வளர்ச்சி சிறப்பாக உள்​ளது. கடந்த 8 ஆண்​டு​களில் இல்​லாத அளவில் பணவீக்க விகிதம் குறைந்​து, கடந்த ஜூலை​யில் 1.55 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. வருங்​கால வைப்பு நிதி​யகம்​(EPFO) ஜூன் மாதத்​தில் இது​வரை இல்​லாத அளவுக்கு சுமார் 22 லட்​சம் புதிய உறுப்​பினர்​களை சேர்த்​துள்​ளது.

மக்களின் வாங்கும் திறன் உயர்வு: இதுத​விர, பொது​மக்​களின் வாங்​கும் திறன் 17 ஆண்​டு​களில் இல்​லாத மிக உயர்ந்த நிலையை எட்​டி​யுள்​ளது. இந்​தி​யா​வின் நிதி​நிலை தொடர்ந்து மேம்​பட்டு வரு​கிறது. வரு​வாய் பற்​றாக்​குறை 4.4 சதவீத​மாகக் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மத்​திய அரசின் நிதி கட்​டமைப்​பில் ஏற்​றத்​தாழ்வு ஏற்​பட்​டாலும், தொழிற்​சாலைகளின் வளர்ச்சி மற்​றும் வேலை​வாய்ப்​பு​கள் சிறப்​பாக உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த மாத இறு​திக்​குள் சீர்​திருத்​தம் செய்​யப்​பட்ட ஜிஎஸ்டி அறி​விப்​பு​கள் வெளி​யாகும். இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் இன்றும், நாளை​யும் ​(செப்​. 3, 4) நடை​பெற உள்​ளது. அதனடிப்​படை​யில் மக்​களுக்கு நேரடி​யாக கூடு​தல் சலுகைகள் கிடைக்​கும் வகை​யில் ஜிஎஸ்​டியில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, சமூக நலத்​துறை அமைச்​சர் கீதா ஜீவன், சிட்டி யூனியன் வங்​கி​யின் மேலாண்மை இயக்​குநரும் தலைமை செயல் அதிகாரியுமான என்​.​காமகோடி, அலு​வல்சாரா தலை​வர் ஜி.ம​காலிங்​கம் மற்​றும் முக்​கிய பிர​முகர்​கள் பலர் கலந்​து​கொண்டனர்.

முன்​ன​தாக 2 நாள் தமிழக சுற்​றுப்​பயணத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சென்​னைக்கு நேற்று வந்​தார். சென்னை வி​மான நிலை​யத்​தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் தாமோ அன்​பரசன், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், பொறுப்​பு டிஜிபி வெங்​கட்ராமன்​ உள்​ளிட்டோர் வரவேற்றனர்.



Read More

Previous Post

பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி | afghanistan beats pakistan by 18 runs in t20i tri series

Next Post

இந்தியா அமெரிக்கா வரி பிரச்னைக்கிடையே, இரு நாடுகளும் ராணுவப் பயிற்சி

Next Post
இந்தியா அமெரிக்கா வரி பிரச்னைக்கிடையே, இரு நாடுகளும் ராணுவப் பயிற்சி

இந்தியா அமெரிக்கா வரி பிரச்னைக்கிடையே, இரு நாடுகளும் ராணுவப் பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin