கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,620க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.76,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 1), 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,705க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.77,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,030க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,240க்கு விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், தங்கத்தின் விலை சவரனுக்கு 3,700 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது.


