1966 விண்டேஜ் டிசைன் – 2023 ஹைடெக்
2014ஆம் ஆண்டு அறிமுகமான ஹோங்க்சி L5, 1966ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட CA770 மாடல் விண்டேஜ் காரின் டிசைனில் உருவாக்கப்பட்டது. வட்டமான ஹெட்லைட்கள், பெரிய க்ரோம் கிரில், ஹூடில் சிவப்பு கொடி வடிவம் போன்ற அம்சங்கள், சீனாவின் பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் கம்பீரமாக வெளிப்படுத்துகின்றன.
ரஷ்யாவிற்கு ரோல்ஸ்-ராய்ஸ் என்றால், சீனாவிற்கு ஹோங்க்சி.

1966ஆம் ஆண்டு அறிமுகமான CA770 மாடல் காரின் டிசைனை அப்படியே பாரம்பரிய டிசைனாகக் கொண்டு, உயர் மட்ட பாதுகாப்புடன், உலகை மிஞ்சும் ஹைடெக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது ஹோங்க்சி L5.
சொகுசாக உட்காரும் வசதி கொண்ட, 6 மீட்டர் நீளமுள்ள செடான். உட்கட்டமைப்புகள் அனைத்தும் கைகளால் துல்லியமாக செய்யப்பட்டவை. கம்பீரமாகவும் மிடுக்காகவும் சாலையில் பறக்கும் இதன் இன்ஜின் 4.0 லிட்டர் டர்போ V8.
இதன் விலை 7.18 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்).

