அப்போது, கடந்த வாரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் சார்பில் பிகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயைப் பற்றி கருத்துக் கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், அது பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, எனது தாயை அவமதித்து விட்டனர். ‘இந்தியத் தாயை’ அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல, அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் தாயை இழிவாகப் பேசிய போது, என் இதயம் எவ்வளவு காயமடைந்ததோ, அதைவிட பிகாரில் உள்ள பெண்கள், அதைக் கேட்டு எந்த அளவுக்கு வலியை சுமந்தீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும் காங்கிரஸ் கட்சியையும் நான் மன்னித்துவிடுவேன், ஆனால், எனது தாயை இழிவாகப் பேசியவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சி, பெண்களால்தான் கவிக்கப்பட்டது என்பதால், அக்கட்சி பெண்களை பழிவாங்குகிறது. எனது தாயை இழிவாகப் பேசியவர்களின் மனநிலையே, பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்பதுதான்.

