• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மோடி சீனா பயணம்: "நாடாளுமன்றத்தில் 'சீனா' என வாய் திறந்து மோடி பேசியதில்லை; ஆனால்" – சீறிய ஜோதிமணி

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
மோடி சீனா பயணம்: "நாடாளுமன்றத்தில் 'சீனா' என வாய் திறந்து மோடி பேசியதில்லை; ஆனால்" – சீறிய ஜோதிமணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திண்டுக்கல் 12வது புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டார்.

பின் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்தியா முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து அமெரிக்காவிற்கு மட்டும் 35% ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரூர் ஆடை உற்பத்தியாளர்கள் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்கனவே 25% மானியத்தில் பொருட்கள் வழங்கி வரும் நிலையில் கூடுதலாக 25% மானியம் கேட்கின்றனர். ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பீட்டிலிருந்து இருந்து மீள முடியாமல் இருக்கிறோம்.

அமெரிக்கத் தேர்தலின் போது நரேந்திர மோடி டிரம்ப்-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எந்த நாட்டின் பிரதமரும் மற்ற நாட்டிற்குப் பிரசாரம் செய்ய மாட்டார்கள். 50 சதவீத பெட்ரோலிய இறக்குமதியின் காரணமாகப் பயனடைவது பாஜக, அதானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமே. பாதிக்கப்படப் போவது சிறு குறு தொழில் செய்பவர்களே.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையில் மோடியின் சீனப்பயணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சீன உதவியுடன் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக ஆலோசனை கொடுத்து ஆயுதங்கள் வழங்குகிற சீனாவிற்கு எதற்குப் போக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சீனா என வாய் திறந்து மோடி பேசியது இல்லை. சீனாவைக் கண்டு பயப்படும் பிரதமராகவே நரேந்திர மோடி இருக்கிறார். பாஜக அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது. வாக்குத் திருட்டைத் தடுத்தால்தான் இந்தியாவிற்கு நல்லது. ஊழல்களுக்கு ஏற்கனவே வலுவான சட்டம் உள்ளது. ஆனால் இப்போது 30 நாட்கள் சிறையிலிருந்தால் பதவி பறிக்கப்படும் என்பது கருப்பு சட்டத்தைப் போன்றது.

செப்டம்பரில் 75 வயது; ஓய்வு பெறுவதில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்ஸை தாஜா செய்தாரா மோடி? – காங்கிரஸ்

இந்தச் சட்டத்தின் மூலம் 30 நாட்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம். அமலாக்கத்துறை தமிழ்நாட்டிலேயேதான் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பொய் வழக்குப் போட்டுவிட்டு 30 நாட்கள் சிறையில் வைத்து பதவியைப் பறிக்கலாம் என்பது காமெடியா?

இது போன்ற சட்டங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கும் ராகுல் காந்தி, எம்.பிகள், எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எதிராகப் போராடியவர்களையும் பாதிக்கும். அமலாக்கத்துறை தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களே அமலாக்கத்துறை அலுவலகமாகச் செயல்படுகிறது.

ஜோதிமணி
ஜோதிமணி

தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுகிறது என்பதற்காகவே எம்பி சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதத்திலிருந்து வருகிறார். விஜய் காங்கிரஸ் கட்சியைப் பேசுவதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதர்களுக்கு ஓட்டைக் கூட பாஜக திருடுகிறது. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் 50 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் இல்லை” எனத் தெரிவித்தார்.

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…’- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Previous Post

Gold | விலை உயர்ந்தாலும் கவலையில்லை.. வெறும் 10 ரூபாயில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்! | வணிகம்

Next Post

அரசாங்கம் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும், இலக்கிடப்பட்ட மானியங்களைத் தொடர்வதிலும் கவனம் செலுத்துகிறது! | Makkal Osai

Next Post
அரசாங்கம் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும், இலக்கிடப்பட்ட மானியங்களைத் தொடர்வதிலும் கவனம் செலுத்துகிறது! | Makkal Osai

அரசாங்கம் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும், இலக்கிடப்பட்ட மானியங்களைத் தொடர்வதிலும் கவனம் செலுத்துகிறது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin