Last Updated:
இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு முதல் முறையாக பயணித்து, அதை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதி தெரிவித்தார்.
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை என இலங்கை அதிபர் அனுர குமார தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார, இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். மயிலிட்டி துறைமுகத்தில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் திடீரென நான்கு ரோந்துப் படகுகளுடன், கச்சத்தீவுக்கு சென்ற அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார்.
அப்போது பேசிய அவர், இலங்கை மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் எனவும் எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் எனவும் தெரிவித்தார். பின்னர், கச்சத்தீவின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு, இலங்கை கடற்படையின் ரோந்துப் படகில் யாழ்ப்பாணம் திரும்பினார். இலங்கை அதிபர் ஒருவர், கச்சத்தீவுக்கு பயணம் சென்றது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
September 02, 2025 10:22 AM IST
“எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்” இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு திடீர் பயணம்


