Last Updated:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட 5 வருடங்களாக காணாமல் போன நிலையில், தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன ஒரு நபர் கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து மனநிலை பாதிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளார். தகுந்த அனுமதி இல்லாமல் எல்லை பகுதியைக் கடந்துபோன காரணத்தினால் பாகிஸ்தான் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பான தகவல்களை இந்தப் பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உண்ணாவோ மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட 5 வருடங்களாக காணாமல் போன நிலையில், தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பி இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரஜ்பால் என்ற 45 வயது நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அக்கிரம்பூர் சுல்தான் கேரா என்ற கிராமத்தின் சடார் கோட்வாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவரை கடந்த அக்டோபர் 27, 2020 முதல் காணவில்லை என்று இவருடைய குடும்பத்தார் புகார் ஒன்றை பதிவு செய்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சூரஜ் பாலின் உறவினரான ரமேஷ் கூறுகையில், டிசம்பர் 2020இல் சூரஜ் இந்திய எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த காரணத்தினால் அவரை பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்திருப்பதாக ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லைப் பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சூரஜ் பாலின் குடும்பத்தினரிடம் அக்டோபர் 2021இல் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும், மே 2024இல் பால் விடுவிக்கப்பட்டு வாகா எல்லையில் அமைந்திருக்கும் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறவினர் ஒருவர் கூறுகிறார்.
மேலும், அதனை அடுத்து சூரஜ் பாலின் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எந்தவிதமான கேள்விகளுக்கும் அவரால் தெளிவாக பதில் கூற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியான அரவிந்த் பாண்டி கூறியுள்ளார்.
தெரிந்தோ தெரியாமலோ இந்திய எல்லையை கடந்து தவறுதலாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த பலருடைய நிலைமை சொல்ல முடியாத அளவுக்குத்தான் இருந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் வாழ்க்கையையே இழந்துவிட்டு குடும்பத்தாருக்கும் சோகத்தைத் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.
September 01, 2025 5:20 PM IST


