Last Updated:
ஜலாலாபாத் நகரை மையமாகக் கொண்டு நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜலாலாபாத் நகரை மையமாகக் கொண்டு நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. ஜலாலாபாத் அருகே உள்ள குனர், லக்மன் மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
இரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரம் கழித்து ஜலாலாபாத் நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.
இதில், இடிபாடுகளில் சிக்கி 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மலைப்பாங்கான பகுதிகளில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாட்பர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
September 01, 2025 4:43 PM IST


