• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள்” ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள்” ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 01, 2025 8:51 AM IST

மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சுற்றுப்பயணத்தில் அயலக தமிழர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் சிறிய தொழில்கள் தொடங்குமாறு கேட்டார்; லண்டனிலும் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார்.

ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்புஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு வாழும் அயலக தமிழர்கள் மத்தியில் சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் செயலாளர்களுடன் பெர்லின் சென்றடைந்த முதலமைச்சரை, “ஸ்டாலின் அப்பாவை வரவேற்கிறோம்” என்ற பதாகையை ஏந்தியபடி அயலக தமிழர்கள் வரவேற்றனர்.

அவர்களுடன் முதலமைச்சர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஜெர்மனிவாழ் தமிழ்க் குடும்பங்களின் பாசமிகு வரவேற்பு நெகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கவும் பெருமையுடன் முன்னேறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், நேற்று அந்நாட்டின் கலோன் (Cologne ) நகரில் அயலகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளர்ச்சியடைந்த நாடுகளை போன்று தமிழ்நாடும் வளர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் உங்களால் முடிந்த உதவிகளை உங்கள் தாய் மண்ணுக்கு செய்ய வேண்டும். நீங்கள் செய்வது சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

#JUSTIN நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கவும் – ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க்கனவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு#MKStalin #Germany #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/mNi3dXkFOA


— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 1, 2025

இந்நிலையில், வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் சந்தித்துப் பேச உள்ளார். பின்னர் வரும் 7ஆம் தேதி ஒரு வார வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் தாயகம் திரும்ப உள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 01, 2025 8:51 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள்” ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

Read More

Previous Post

Post Office | ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.10,00,000 கிடைக்கும்.. அசர வைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம்

Next Post

சாரா (SARA) ஒரு முறை உதவித் திட்டத்தின் முதல் நாளில் சுமார் 850,000 மலேசியர்கள் பொருட்களை வாங்கினர் | Makkal Osai

Next Post
சாரா (SARA) ஒரு முறை உதவித் திட்டத்தின் முதல் நாளில் சுமார் 850,000 மலேசியர்கள் பொருட்களை வாங்கினர் | Makkal Osai

சாரா (SARA) ஒரு முறை உதவித் திட்டத்தின் முதல் நாளில் சுமார் 850,000 மலேசியர்கள் பொருட்களை வாங்கினர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin