• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல: அதிபர் ட்ரம்ப் விதித்த வரி விவேகமான கொள்கை கிடையாது – அமெரிக்க பத்திரிகையாளர் விமர்சனம் | India not school child President Trump tax policy not  wise American journalist

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல: அதிபர் ட்ரம்ப் விதித்த வரி விவேகமான கொள்கை கிடையாது – அமெரிக்க பத்திரிகையாளர் விமர்சனம் | India not school child President Trump tax policy not  wise American journalist
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: ‘‘இந்​தியா பள்​ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேக​மான கொள்கை கிடை​யாது’’ என அமெரிக்க பத்​திரி​கை​யாளர் ரிக் சான்​சேஸ் விமர்​சனம் செய்​துள்​ளார்.

உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்​தும் ரஷ்​யா​விடம் இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், இந்​தி​யா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்​கான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத​மாக உயர்த்​தி​னார்.

அதிபர் ட்ரம்ப் அறி​வித்த வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது எனவும், இதை நீக்க வேண்​டும் என அமெரிக்க மேல் முறை​யீட்டு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

இதுகுறித்து அமெரிக்க பத்​திரி​கை​யாளர் ரிக் சான்​சேஸ் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வை, பள்​ளிக் குழந்தை போல் அமெரிக்கா நடத்தக் கூடாது. இந்​தியா பெரிய நாடு.

அதிபர் ட்ரம்ப் எடுக்​கும் முடிவுகள் பெரும்​பாலும் அக்​கறையுடன் கூடிய மற்​றும் அறி​வியல் பூர்​வ​மான சிந்​தனை​யாக இருப்​ப​தில்​லை. இந்​தியா எடுக்​கும் முடிவு​களுக்கு மேற்​பார்வை தேவை என்​பது போல் அமெரிக்​கா​வின் அணுகு​முறை உள்​ளது.

இதை கண்​டு​கொள்​ளாமல் இந்​தியா தனது நிலைப்​பாட்டை அப்​படியே பின்​பற்​று​வது பாராட்​டுக்​குரியது. அமெரிக்​கா​வின் வரிக் கொள்கை பார்ப்​பவர்​களுக்கு மிகச் சிறந்​தவை​யாக இருப்​பது போல் தெரி​யும்.

ஆனால், இது அவம​திப்​பான மற்​றும் விவேகமற்ற கொள்​கை. உக்​ரைன் மீது ரஷ்யா ஏன் போர் தொடுத்​தது என்ற நிலைப்​பாட்டை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் புரிந்து கொள்​ள​வில்​லை. நீண்ட வரலாறு, வளங்​கள் மற்​றும் திறன்​கள் உள்ள இந்​தி​யா​வை, பள்​ளிக் குழந்தை போல் நடத்​து​வது அவம​திப்​பானது. இந்​தியா வளர்ந்த நாடு.

ரஷ்​யா​விடம் இருந்து சீனா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​தா​லும், அதன் மீது நடவடிக்கை எடுப்​ப​தில் அமெரிக்கா தனது வரம்​பு​களை உணர்​கிறது. இந்​தியா மீது 50 சதவீத வரி விதிக்​கும் விஷ​யத்​தில் அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு அவரது தனிப்​பட்ட கோபம் காரண​மாக எடுக்​கப்​பட்​டது.

சர்​வ​தேச விஷ​யங்​களில் பின்​னணி சம்​பவங்​களை பற்றி அமெரிக்க தலை​வர்​கள் பலருக்கு சரி​யான புரிதல் இல்​லை. ரஷ்யா – உக்​ரைன் இடையே​யான மோதலை பிரதமர் மோடி​யால் நடைபெறும் போர் என அதிபர் ட்ரம்​பின் ஆலோ​சகர் பீட்​டர் நவேரோ கூறுகிறார். இது முற்​றி​லும் நகைப்​புக்​குரிய​தாக உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



Read More

Previous Post

இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள் | Indians boycott Pepsi Coca-Cola KFC 50 percent us tariff echo

Next Post

நிலநடுக்கம் தொடர்பான நம்பகத்தனமான தகவல்களுக்கு மெட்மலேசியாவையே பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டும்- துணை அமைச்சர் | Makkal Osai

Next Post
நிலநடுக்கம் தொடர்பான நம்பகத்தனமான தகவல்களுக்கு மெட்மலேசியாவையே பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டும்- துணை அமைச்சர் | Makkal Osai

நிலநடுக்கம் தொடர்பான நம்பகத்தனமான தகவல்களுக்கு மெட்மலேசியாவையே பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டும்- துணை அமைச்சர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin