• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ‘ஏதர் இஎல்-01’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்! | Ather Energy launches Ather EL-01 electric scooter for family use budget price

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஏதர் எனர்ஜி நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் குடும்ப பயன்பாட்டுக்கான ‘ஏதர் இஎல்-01’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்! | Ather Energy launches Ather EL-01 electric scooter for family use budget price
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏதர் எனர்ஜி நிறு​வனம் சார்​பில் குறைந்த விலை​யில் குடும்ப பயன்​பாட்​டுக்​கான ஏதர் ‘இஎல்​01’ மின்​சார ஸ்கூட்​டர், ஏதர் ‘ரெடெக்​ஸ்’ (மோட்டோ வகை) மின்​சார ஸ்கூட்​டர்​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதனை அடுத்த ஆண்டு சந்​தைப்​படுத்​து​வதற்​கான பணி​களில் ஏதர் எனர்ஜி நிறுவனம் தீவிரம் காட்டி வரு​கிறது.

நாட்​டின் முன்​னணி மின்​சார இருசக்கர வாகன உற்​பத்தி நிறு​வனங்​களில் ஒன்று ஏதர் எனர்ஜி நிறு​வனம். இந்​நிறு​வனம், பல்​வேறு முன்​னணி மின்​சார இருசக்கர வாகன நிறு​வனங்​களு​டன் போட்​டி​யிட்டு தங்​களு​டைய 450 சீரிஸ், ரிஸ்டா எலக்ட்​ரிக் ஸ்கூட்​டர்​களை விற்​பனை செய்து வரு​கிறது. இந்​நிலை​யில், ஏதர் மின்​சார ஸ்கூட்​டர் பயன்​பாட்​டாளர்​களுக்​கான மூன்​றாவது வரு​டாந்​திர ‘ஏதர் சமூக தினம் 2025’ பெங்​களூரு​வில் ஆக.30-ம் தேதி நடந்​தது.

இந்த நிகழ்ச்​சி​யில் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து ஏதர் மின்​சார ஸ்கூட்​டர் பயனாளர்​கள், இருசக்கர வாகன ஆர்​வலர்​கள் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். ‘ஏதர் 450’ தொடருக்​குப் பிறகு ஏதரின் முதல் புதிய வாக​னக் கட்​டமைப்பு மற்​றும் அடுத்த தலை​முறை மின்​சார ஸ்கூட்​டர்​களுக்​கான புதிய ‘இஎல் எலக்ட்​ரிக் ஸ்கூட்​டர் இயங்​குதளத்​தை’ ஏதர் சமூக தினத்​தில் அந்​நிறு​வனம் வெளி​யிட்​டது. அந்​தவகை​யில், ‘இஎல் இயங்​குதளம்’ மூலம் தயாரிக்​கப்​பட்ட முதல் குறைந்த விலை மின்​சார ஸ்கூட்​ட​ராக ‘ஏதர் இஎல்​01’ அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, குடும்ப பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில், முழு எல்​இடி விளக்​கு​கள், இருக்​கைக்கு அடி​யில் இரண்டு ஹெல்​மெட்​டு​கள் வைக்​கும் வகை​யில் இடைவெளி, பெரிய தொடு​திரை பலகை, 14 இன்ச் சக்​கரங்​கள், மேலும், காப்​புரிமை பெற்ற ஏசி – டிசி தொகுதி ஆகிய​வற்றை ஏதர் இஎல்01 ஸ்கூட்​டர் கொண்​டுள்​ளது. மேலும், இது பராமரிப்பு செல​வை​யும் குறைக்​கும் என ஏதர் நிறு​வனம் நம்​பிக்கை கொண்​டுள்​ளது.

அதோடு, ‘ரெடெக்​ஸ்’ என்ற எதிர்​காலத்​தின் மோட்டோ ஸ்கூட்​டரை​யும் ஏதர் சமூக தினத்​தில் அந்​நிறு​வனம் வாடிக்​கை​யாளர்​களுக்கு அறி​முகப்​படுத்​தி​யது. மற்ற நிறு​வனங்​களின் மின்​சார ஸ்கூட்​டர்​களின் விலையை ஒப்​பிடும்போது, ஏதர் நிறு​வனத்​தின் ஸ்கூட்​டர்​கள் ரூ.1 லட்​சத்​துக்கு அதி​க​மாகவே காணப்​படு​கிறது. எனவே, தற்​போது, அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள ஏதர் இஎல்01 ஸ்கூட்​டர் குடும்ப பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில், விலை ரூ.1 லட்​சத்​துக்​கும் குறை​வான விலை​யில் சந்​தைப்​படுத்​தப்​படலாம் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தற்​போது, இந்த ஸ்கூட்​டர்​கள் மக்​களின் பார்​வைக்​காக மட்​டுமே அறி​முகம் செய்​துள்ள நிலை​யில், அடுத்த ஆண்டு சந்​தைப்​படுத்​தும் போது, அதற்​கான விலை பட்​டியலை​யும் அந்​நிறு​வனம் வெளி​யிட இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளது.

மேலும், ஏற்​க​னவே பயன்​பாட்​டில் இருக்​கும் ஏதர் ரிஸ்டா மின்​சார ஸ்கூட்​டரில் பல்​வேறு பாது​காப்பு வசதி​களை புதுப்​பித்து ஏதர் நிறு​வனம் அறி​முகம் செய்​துள்​ளது.

குறிப்​பாக, மோச​மான சாலை பகு​தி​யில் ஸ்கூட்​டரை இயக்​கும் போது பள்​ளங்​களை முன்​கூட்​டியே கண்​டறிந்து எச்​சரிப்​பது, விபத்து எச்​சரிக்​கை, திருட்​டில் இருந்து பாது​காப்​பது, க்ரூஸ் கட்​டுப்​பாடு மற்​றும் தொடு​திரை செயல்​பாடு என ஏற்​க​னவே இருக்​கும் வாடிக்​கை​யாளர்​களை மகிழ்விக்​கும் முயற்​சி​யாக ரிஸ்டா மின்​சார ஸ்கூட்​டரின் செயல்​பாடு​களை புதுப்​பித்​துள்​ளது.

இந்​நிலை​யில், ‘இஎல் இயங்​குதளம்’ உற்​பத்தி செல​வு​களை குறைப்​ப​தாக​வும், புது​மை​யான தயாரிப்​பு​களுக்கு வழி​வகுப்​ப​தாக​வும், ஏதர் எனர்ஜி நிறு​வனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி தருண் மேத்தா தெரி​வித்​தார். இது

குறித்து அவர் மேலும் கூறிய​தாவது:

இஎல் இயங்​குதளத்​துடன், ஏதரின் அடுத்​தக்​கட்ட வளர்ச்​சிக்கு நாங்​கள் அடித்​தளம் அமைக்​கிறோம். ‘ஏதர் 450’ சீரிஸ் எங்​களது முதல் அத்​தி​யாத்தை வரையறுத்​தது போல, ‘இஎல்’ எங்​களுக்கு பல வகை அளவு​களில், குறைந்த விலை​யில் மின்​சார ஸ்கூட்​டர்​களை உரு​வாக்க உதவு​கிறது. மேக்ஸி ஸ்கூட்​டர் முதல் ஃபேமிலி ஸ்கூட்​டர் வரை பல்​வேறு வகை​யான ஸ்கூட்​டர்​களை உரு​வாக்​கும் வகை​யில் இந்த ‘இஎல் இயங்​குதளம்’ வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

அந்​தவகை​யில், இந்த ‘இஎல் இயங்​குதளம்’ மூலம் தயாரிக்​கபட்ட முதல் குறைந்த விலை மின்​சார ஸ்கூட்​ட​ராக ‘ஏதர் இஎல்​01’ அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது, ஏதர் 450, ரிஸ்டா சீரிஸில் பயன்​படுத்​தப்​படும் தற்​போதைய தளத்​தில் இருந்து முற்​றி​லும் வேறு​பட்​டது. அடுத்த ஆண்​டுக்​குள் இதனை சந்​தைப்​படுத்த திட்​ட​மிட்டு வரு​கிறோம்.

அதே​போல், ஏற்​க​னவே பயன்​பாட்​டில் உள்ள ஏதர் ஸ்கூட்​டர்​களுக்கு பல்​வேறு புதிய வசதி​களை புதுப்​பித்​துள்​ளோம். அந்​த வகை​யில், ஸ்கூட்​டரை யாரேனும் இடித்​தாலோ, கீழே விழுந்​தாலோ, அந்த ஸ்கூட்​டரின் உரிமை​யாளரின் செல்​போனுக்கு அலெர்ட் சென்​று​விடும். மேலும், ஏதர் அதிவேக சார்​ஜிங், ஹலோ மற்​றும் குழந்​தைகள் ஹெல்​மெட், க்ரூஸ் கண்ட்​ரோல் போன்ற பல்​வேறு வசதிகளை அறிமுகம் செய்​திருக்​கிறோம் என்றார்.



Read More

Previous Post

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கடும் கண்டனம்!

Next Post

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு! | educate girls Indian charity organization selected for Magsaysay Award

Next Post
இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு! | educate girls Indian charity organization selected for Magsaysay Award

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு! | educate girls Indian charity organization selected for Magsaysay Award

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin