Last Updated:
ATM பயன்பாட்டுக்கான உச்சவரம்போடு சேர்த்து அதிக மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகள் செய்வதற்கான புதிய விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ATMகள் மூலமாக பேங்கிங் என்பது மிகவும் சௌகரியமான ஒன்றாக மாறியுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்வதற்கான தேவைகளை குறைப்பதில் ATMகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் ATM டிரான்ஸாக்ஷன்கள் சம்பந்தமான விதிகள் மற்றும் கட்டணங்கள் குறித்து பலர் தெரிந்து வைத்துக் கொள்வது கிடையாது. சமீபத்தில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ATM இல் டிரான்ஸ்ஷாக்ஷன் செய்வதற்கான இலவச உச்சவரம்புகள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் சம்பந்தமான அப்டேட் செய்யப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இலவச பரிவர்த்தனைக்கான உச்சவரம்புகள்:
புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு மாதமும் தங்களுடைய இருப்பிடத்தை பொறுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச ATM பரிவர்த்தனைகள் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் மெட்ரோபாலிட்டன் நகரங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதில் கேஷ் வித்டிராயல்கள் மட்டுமல்லாமல், பேலன்ஸ் சம்பந்தப்பட்ட என்குயரி மற்றும் பிற பண சம்பந்தப்படாத பரிவர்த்தனைகளும் அடங்கும். மெட்ரோபாலிட்டன் அல்லாத நகரங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த உச்சவரம்பை கடந்து விட்டால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிக்கு அதிகாரம் உண்டு.
உச்சவரம்பை மீறுவதற்கான கட்டணங்கள்:
இலவச பரிவர்த்தனைகளுக்கான எண்ணிக்கைகளை விட பரிவர்த்தனைகளை செய்வதற்கு GST உட்பட ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வசூலிக்கப்படும். இது கேஷ் வித்டிராயல் போன்ற சேவைகளுக்கு பொருந்தும். பேலன்ஸ் என்கொயரி போன்ற பொருளாதாரம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 11 ரூபாய் வரை ஒரு சில வங்கிகள் வசூலிக்கின்றனர். இந்த கட்டணங்கள் என்பது வங்கியின் பாலிசிகளை பொறுத்து மாறுபடலாம்.
அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்வதற்கான விதிகள்:
ATM பயன்பாட்டுக்கான உச்சவரம்போடு சேர்த்து அதிக மதிப்பு கொண்ட பண பரிவர்த்தனைகள் செய்வதற்கான புதிய விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் மொத்தமாக 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான கேஷ் டெபாசிட் அல்லது வித்டிராயல் செய்வதற்கு முறையான அறிக்கையிடுவது அவசியம். மேலும் இது மாதிரியான பண பரிவர்த்தனைகளுக்கு PAN கார்டு மற்றும் ஆதார் நம்பர் கட்டாயம் தேவை. கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வெளிப்படை தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ATM கட்டணங்களை தவிர்ப்பதற்கான வழிகள்:
வாடிக்கையாளர்கள் வீண் கட்டணங்களை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. இதில் மிக பயனுள்ள வழி என்பது உங்களுடைய அக்கவுண்ட் உள்ள அதே வங்கி ATMல் பணத்தை எடுப்பது அடங்கும். ஏனெனில் வழக்கமாக உங்களுடைய வங்கியில் அதிக இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும். பேலன்ஸ் சரிபார்ப்பது போன்றவற்றிற்கு இன்டர்நெட் அல்லது மொபைல் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும். கூடுதலாக ஒரு மாதத்தில் நீங்கள் எத்தனை முறை ATM பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிடுங்கள். மேலும் இதன் மூலமாக வீண் கட்டணங்களை உங்களால் தவிர்க்க முடியும்.
August 31, 2025 12:03 PM IST


