Last Updated:
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இருதரப்பு உறவுகள் நீடிப்பதற்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிகப்படியான வரியை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் மிக மோசமான நிலையில் இருந்தன. அந்த மோதலுக்குப் பிறகு, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முன்னேற்றம் ஓரளவு ஏற்பட்டது.
இந்த நிலையில் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு டியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிடில் பங்கேற்றுள்ளார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய அமர்வின்போது பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மேம்பட, எல்லைப் பகுதிகளில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம் என்பதை சீன அதிபரிடம் வலியுறுத்தினார்.
மோடி மற்றும் ஜிங் பிங் என இரு தலைவர்களும், இரு நாடுகளுக்கும் இடையேயான மக்களை சார்ந்த தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இதன் ஒரு பகுதியாக, நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவும், விசா நடைமுறைகளை எளிதாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க் அதிபர் ட்ரம்பின் வர்த்தகப் போர் காரணமாக, இரு நாடுகளும் தங்களுக்குள் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
August 31, 2025 6:41 PM IST
‘இருதரப்பு உறவுகள் நீடிக்க எல்லையில் அமைதி நிலவுவது அவசியம்’ – சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்


