Last Updated:
14 வயதே ஆன வைபவ், 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து, டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
தனது அதிரடியான ரன் குவிப்பால் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 13 வயதிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹1.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில், அவர் தனது திறமையை நிரூபித்து, 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்தார். ஜெய்ப்பூரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த சதம், கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
14 வயதே ஆன வைபவ், 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து, டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவரது 35 பந்து சதம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதமாகப் பதிவானது.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இங்கிலாந்துக்குச் சென்ற வைபவ், இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் சதம் அடித்து, யு-19 ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர் என்ற உலக சாதனையையும் படைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ரிஷப் பந்த், வைபவ் சூர்யவன்ஷி, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் வருவார்கள் என்றும் கூறினார்.
August 31, 2025 2:58 PM IST


