• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா; மிர்ரா ஆண்ட்ரீவா, பவுலினி அதிர்ச்சி தோல்வி | Sabalenka gets to reach fourth round

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா; மிர்ரா ஆண்ட்ரீவா, பவுலினி அதிர்ச்சி தோல்வி | Sabalenka gets to reach fourth round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 32-ம் நிலை வீரரான இத்தாலியின் லூசியானோடார்டெரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-3), 6-7 (9-11), 6-4, 6-4 என்ற செட்கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்மையும், 7-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-7 (4-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கிரேட்பிரிட்டனின் கேமரூன் நோரியையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர். 6-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவுடன் மோதினார்.

இதில் அட்ரியன் மன்னாரினோ 3-6, 6-3, 4-6, 6-4என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஷெல்டன் விலகினார். இதனால் அட்ரியன் மன்னாரினோ 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீராங்கனையான கனடாவின் லெய்லா பெர்னாண்டஸையும், 4-ம் நிலைவீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 7-5 என்றசெட் கணக்கில் பெலாரஸின் விக்டோரியா அசரன்காவையும், 9-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் எம்மா ரடுகானுவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

5-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 5-7, 2-6 என்ற கணக்கில் 139-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டிடமும், 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-7 (4-7), 1-6 என்ற செட் கணக்கில் 60-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவாவிடமும், 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 62-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா க்ரெஜிகோவாவிடமும் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

இந்திய ஜோடி அசத்தல்: ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், விஜய் பிரசாந்த் ஜோடி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், இவான் கிங் ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 42 நிமிடங்களில் முடிவடைந்தது.



Read More

Previous Post

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

Next Post

Gold Rate | 200 சதவீதம் உயர்வு.. வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? | வணிகம்

Next Post
Gold Rate | 200 சதவீதம் உயர்வு.. வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? | வணிகம்

Gold Rate | 200 சதவீதம் உயர்வு.. வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin