• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீர் விலகல் ஏன்?  | Rahul Dravid steps down as head coach of Rajasthan Royals

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீர் விலகல் ஏன்?  | Rahul Dravid steps down as head coach of Rajasthan Royals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து ராகுல் திரா​விட் திடீரென விலகி உள்​ளார்.

ஐபிஎல் 2025 சீசனையொட்டி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ராக ராகுல் திரா​விட் நியமிக்​கப்​பட்​டிருந்​தார். அவர், காலில் காயமடைந்​திருந்த போதி​லும் வீல் சேரில் வந்து அணிக்கு ஆலோ​சனை​கள் வழங்​கி​னார். இந்​நிலை​யில் ராகுல் திரா​விட் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பயிற்​சி​யாளர் பதவி​யில் இருந்து விலகி உள்​ள​தாக அந்த அணி நிர்​வாகம் தனது எக்ஸ் வலைதள பதி​வில் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி தனது எக்ஸ் வலைதள பதி​வில்​”ராகுல் திரா​விட் பல ஆண்​டு​களாகராயல்ஸ் அணி​யின் பயணத்​தில் மைய​மாக இருந்து வரு​கிறார். அவரது தலைமை ஒரு தலை​முறை வீரர்​களிடம் செல்​வாக்கை பெற்​றுள்​ளது, அணிக்​குள் வலு​வான மதிப்​பு​களை விதைத்​துள்​ளது, மேலும் அணி​யின் கலாச்​சா​ரத்​தில் அழி​யாத முத்​திரையை பதித்​துள்​ளது. அணி​யின் கட்​டமைப்​பின் ஒரு பகு​தி​யாக நடை​பெற்ற மதிப்​பாய்​வில் ராகுல் திரா​விட்​டுக்கு பெரிய பதவி வழங்​கப்​பட்​டது, ஆனால் அதை ஏற்​க​வில்​லை.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​காக​வும், வீரர்​களுக்​காக​வும் அவர், செய்த சேவைக்கு அணி சார்​பாக​வும், உலகெங்​கிலும் உள்ள மில்​லியன் கணக்​கான ரசிகர்​கள் சார்​பாக​வும் மனமார்ந்த நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சஞ்சு சாம்​சன் அணியி​லிருந்து விலகி சிஎஸ்​கே​வில் இணைவ​தாக வதந்​தி​கள் பரவிய நிலை​யில் ராஜஸ்​தான் ராயல்​ஸ்​ இந்​தப்​ பதி​வினை வெளி​யிட்​டுள்​ளது.

விலகலுக்கு காரணம் என்ன? –2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடற்தகுதி பிரச்சினையில் சிக்கினார். இதனால் அவர், பல ஆட்டங்களில் விளையாடவில்லை. அந்த நேரங்களில் அதிரடி பேட்ஸ்மேனான ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். எனினும் அவர், கேப்டன்ஷிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அணியில் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோர் இருக்கும் போது ரியான் பராக் முன்னிலைப்படுத்தப்பட்டது விவாதங்களை உருவாக்கியது. இந்த விஷயத்தில் சஞ்சு சாம்சன், ராகுல் திராவிட் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது. கடந்த சீசனில் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்ததால் வரும் 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அணியை கட்டமைக்கும் பணியில் ராஜஸ்தான் அணி ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் ராகுல் திராவிட் விலகி உள்ளார். அவர், விலகலுக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக திராவிட்டின் விலகலுக்கு புதிய கேப்டன் தேர்வு காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும் அணி தேர்வு மற்றும் திட்டங்கள் அமைப்பதில் இருந்து திராவிட்டை விலக்கி வைக்கும் வகையிலேயே அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து மாற்றி உயர் பதவி வழங்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முன்வந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் விருப்பம் இல்லாமல் ராகுல் திராவிட் விலகி உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read More

Previous Post

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

Next Post

ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் | Government advice to promote exports Chief Economic Advisor information

Next Post
ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் | Government advice to promote exports Chief Economic Advisor information

ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு ஆலோசனை: தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் | Government advice to promote exports Chief Economic Advisor information

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin