Last Updated:
பிரதமர் மோடி தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், ஷி ஜின்பிங், ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்ற பிரதமருக்கு சிவப்பு கமபள வரவேற்பு அளிக்கப்பட்டது. தியான்ஜின் விமான நிலையத்தில் திரண்டிருந்த சீனா வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அங்கு, இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பால் நெருக்கடிக்கடிக்கு ஆளான இந்தியாவின் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இந்த மாநாடு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் போது புதின் மற்றும் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார். அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கைகளால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். 10 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இந்த கூட்டமைப்பின் மாநாடு, இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் தலைவர்கள் ஒரே நிகழ்வில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
August 31, 2025 6:57 AM IST
அமெரிக்காவின் வரி விதிப்பு பாதிப்பு: ரஷ்ய அதிபர் மற்றும் சீன அதிபரை இன்று சந்தித்து பேசும் மோடி!


