Last Updated:
போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை போட்டியை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14 ஆம் தேதி மோதுகின்றன. இந்த முறை ஆசிய கோப்பை டி20 ஃபார்மேட்டில் விளையாடப்பட உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சம்சுன் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர் குறித்த முக்கிய அறிவிப்பை போட்டியை நடத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதாவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டி தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டிகள் இரவு 8 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டும் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம் 14ம் தேதி இந்திய அணி – பாகிஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
August 30, 2025 8:06 PM IST


