Last Updated:
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டியில் மலேசிய இணையிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்களான சாதிவிக் – சிராக் இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் களைகட்டி வருகிறது.
இதன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான சாத்விக் – சிராக் இணை – மலேசிய இணையை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது.
ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய இணை 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டியில் மலேசிய இணையிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது.
தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய வீரர்கள் – தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள சீன இணையை எதிர்த்து அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
August 30, 2025 8:19 PM IST


