Last Updated:
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபருடன் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார்.
ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, அமெரிக்கா வரிவிதிப்பால் உருவாகி உள்ள பொருளாதார சுணக்கம், ஸ்திரத்தன்மையற்ற சூழல் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை தனியாக சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
August 30, 2025 5:11 PM IST
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்ற பிரதமர் மோடி… ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்!


