SGD to INR: சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போதைய (ஆக.30) சிங்கப்பூர் பணமாற்று நிலவரப்படி, ஒரு சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.71 ஆகும்.
இதற்கான முக்கிய காரணம், அமெரிக்காவின் வரி விதிப்பாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பும் கடந்த 5 மாத காலகட்டத்தில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு 88.22 ருபாய் என வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு அடைதல், அரசாங்கத்தின் கடன் அதிகரித்தல், இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைவது மற்றும் உலகளாவிய எண்ணெய் விலை, போர், அரசியல் பிரச்சனைகள் போன்றவை பொதுவான காரணமாக பார்க்கப்டுகின்றன.

