மெக்பெர்சன் சாலையில் உள்ள மசாஜ் பார்லரில் தகாத சேவையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆக.28 அன்று காவல்துறை நடத்திய அதிரடி சோதனையின்போது 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்ட அந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மின்சிகரெட்: S பாஸ், ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் கடும் நடவடிக்கை
அதில் 39 வயதான பெண் ஒருவர் அந்த பார்லரை விப*சார விடுதியாக நடத்தியதாக இன்று (ஆக. 30) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றவர்களை வைத்து விப*சாரம் செய்து லாபம் ஈட்டும் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், S$100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
விபச்சார விடுதியை நிர்வகித்தல் தொடர்பான குற்றத்திற்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$100,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
விசாரணைகள் தொடர்கின்றன.
4D லாட்டரியில் 50 மேற்பட்டோர் வெற்றி… ‘2250’ என்ற அதிஷ்ட எண்ணுக்கு கொட்டிய பரிசு!

