• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமானம், சேமிப்பு, முதலீடு… மூன்றையும் அழகாக சமாளிக்க உதவும் 10-30-50 விதி..! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வருமானம், சேமிப்பு, முதலீடு… மூன்றையும் அழகாக சமாளிக்க உதவும் 10-30-50 விதி..! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 9:03 AM IST

டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் என்ற TDS போல சேவிங்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் அதாவது ஒவ்வொரு மாதமும் வருமானத்திலிருந்து கட்டாயமாக சேமிப்புக்காக பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

News18News18
News18

Edelweiss மியூச்சுவல் ஃபண்ட் CEO ஆன ராதிகா குப்தா அவர்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு எளிய சூத்திரத்தை வழங்கியுள்ளார். செலவு செய்வது மற்றும் சேமிப்பு இடையே நடக்கக்கூடிய அந்த போரை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு அவர் எளிமையான குறிப்பு ஒன்றை வழங்கி இருக்கிறார். X தளத்தில் குப்தா வெளியிட்ட பதிவில், அவர் “10-30-50” என்ற விதியைப் பற்றி கூறி இருக்கிறார். இதன் மூலமாக இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை முறை குறிக்கோள்களை நீண்ட கால பொருளாதார பாதுகாப்போடு எப்படி சமநிலை செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

“பல இளைஞர்கள் என்னை வந்து சந்திக்கும்போது முதலீட்டை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்ய வேண்டும்?” என்று குப்தா கூறி இருக்கிறார். பொருளாதார திட்டமிடல் என்பது நம்முடைய வாழ்க்கையின் சந்தோஷங்களை ஒட்டுமொத்தமாக கைவிட வேண்டிய ஒன்று கிடையாது என்பதை குப்தா ஆணித்தனமாக கூறுகிறார். “உண்மையில் வாழ்க்கை என்பது YOLO மற்றும் சேமிப்பு இடையே ஒரு சாய்ஸ் கிடையாது. அது இரண்டையும் நீங்கள் எப்படி சமநிலையாக கையாளுகிறீர்கள் என்பதை பொறுத்தது” என்று அவர் கூறுகிறார்.

அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினரின் பிரபலமான டிரெண்டான YOLO என்பது யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் (You Only Live Once), அதாவது ‘நீங்கள் ஒரு முறை மட்டுமே வாழப் போகிறீர்கள்’ என்று அர்த்தம். தற்போதைய தருணத்தை முழுவதுமாக அனுபவித்து வாழ்வது. சொல்லப்போனால் கூடுதலாக வாழ்க்கை முறைக்காக செலவு செய்வது. இந்த சமநிலையை அடைவதற்கு குப்தா ஒரு சூத்திரத்தை பரிந்துரை செய்கிறார். அதாவது உங்களுடைய 20களில் உங்கள் மாத வருமானத்தில் இருந்து 10 சதவீதத்தை சேமிக்க வேண்டும், 30களில் 30 சதவீதத்தையும் மற்றும் 40களில் 50 சதவீதத்தையும் சேமிக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியாவின் 100 ரூபாய் மாலத்தீவில் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதேபோல், “உங்களுடைய 20களில் 10% சேமியுங்கள் (அல்லது உங்களால் 1 சதவீதம் தான் சேமிக்க முடியும் என்றால் பரவாயில்லை. இங்கு பணம் முக்கியமல்ல பழக்கமே முக்கியமானது). உங்களுடைய 30களில் 30 சதவீதத்தை சேமியுங்கள். இந்த சமயத்தில் வாழ்க்கை மற்றும் இலக்குகள் தீவிரமாக மாறுகிறது. உங்களுடைய 40களில் 50 சதவீதத்தை சேமியுங்கள். இது நீங்கள் அதிக வருமானம் வாங்கும் ஒரு நிலை. இதனை நீங்கள் அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”, என்று குப்தா எழுதி இருக்கிறார். அதேபோல சேமிப்புகளை எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் ஆட்டமேட் செய்ய வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கு அவர் SDS என்ற வார்த்தையை அறிமுகம் செய்திருக்கிறார்.

To YOLO or to save?

I meet so many young people who tell me they don’t know where to start with investing. How much … and then how in first place?

The tussle between attending the next Coldplay concert and putting money away is real. Every generation had it, even before…


— Radhika Gupta (@iRadhikaGupta) August 24, 2025

டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் என்ற TDS போல சேவிங்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் அதாவது ஒவ்வொரு மாதமும் வருமானத்திலிருந்து கட்டாயமாக சேமிப்புக்காக பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். “உங்களுடைய SIP, RD அல்லது FD போன்றவற்றை ஆட்டோமேட் செய்யுங்கள்,” என்று குப்தா பரிந்துரை செய்கிறார். “உங்களால் இரண்டையுமே செய்ய முடியும்- உங்களுக்கு பிடித்தமான ஹேண்ட்பேகையும் வாங்க முடியும், அதே சமயத்தில் உங்களுடைய கனவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்காகவும் பணத்தை சேமிக்க முடியும்” என்று அவர் இறுதியாக ஒரு ஆலோசனையை வழங்குவதன் மூலமாக தன்னுடைய பதிவை நிறைவு செய்திருக்கிறார். குப்தாவின் இந்த 10-30-50 விதி என்பது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார ஒழுக்கத்திற்கான ஒரு வரைபடமாக திகழ்கிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 30, 2025 9:03 AM IST

Read More

Previous Post

கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி | PV Sindhu loses in the quarterfinals

Next Post

US tariffs: “வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

Next Post
US tariffs: “வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin