
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வௌ்ளிக்கிழமை (29) பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐசியுவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

