Last Updated:
ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது மிக மோசமான நிகழ்வு நடந்தது.
17 ஆண்டுகளுக்குப் முன் ஐபிஎல்லின்போது நடந்த சம்பவம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது மிக மோசமான நிகழ்வு நடந்தது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்தார். களத்திலேயே ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அப்போது ஒளிபரப்பானாலும், ஹர்பஜன் அறைந்ததற்கான வீடியோ ஆதாரம் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். போட்டி முடிந்துவிட்ட பின்னர் கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும் இது தனது பாதுகாப்பு கேமராக்களில் பதிவான காட்சி என்றும் லலித் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் உரையாடியபோது, ஸ்ரீசாந்த் உடனான இந்த நிகழ்வை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நீக்க நினைப்பதாக ஹர்பஜன் சிங் வருந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
August 29, 2025 5:26 PM IST


