Last Updated:
2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தனது முதல் பட்டத்தை வென்றது.
செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14 ஆம் தேதி மோதுகின்றன. இந்த முறை ஆசிய கோப்பை டி20 ஃபார்மேட்டில் விளையாடப்பட உள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை மொத்தம் 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளில் வென்றுள்ளது, பாகிஸ்தான் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தனது முதல் பட்டத்தை வென்றது. இது ஐசிசியின் முதல் டி20 உலகக் கோப்பையாகும். இந்தப் பட்டத்தை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது.
2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 2 போட்டிகளில் வென்றுள்ளது, ஒரு முறை தோல்வியடைந்து.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி- சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சம்சுன் யாதவ்.
August 29, 2025 1:53 PM IST


