• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தராகண்டின் சாமோலி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் மேக வெடிப்பு: 8 பேர் மாயம் | Cloudburst in Uttarakhand Chamoli and Rudraprayag districts 8 people missing

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உத்தராகண்டின் சாமோலி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் மேக வெடிப்பு: 8 பேர் மாயம் | Cloudburst in Uttarakhand Chamoli and Rudraprayag districts 8 people missing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டேராடூன்: உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8 பேர் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டதால், பல வீடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கியது. வெள்ளத்தில் சிக்கி தேவாலின் மொபாட்டா பகுதியில், தாரா சிங் மற்றும் அவரது மனைவி என இருவர் காணாமல் போயினர். அதே நேரத்தில் விக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அவர்களின் மாட்டுத் தொழுவமும் இடிந்து விழுந்து கிட்டத்தட்ட 15 முதல் 20 மாடுகள் சகதியில் புதைந்தன.

ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் காணாமல் போயினர். அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் லாரா கிராமத்தில் உள்ள ஒரு பாலம் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

செனகாட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது. ஆற்று நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால், பாதிக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தப்பட்டது. ருத்ரபிரயாக்கில் உள்ள ஹனுமான் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பாசுகேதர் தாலுகாவில், படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டத்தின் தேவால் பகுதியில், மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தில், சில குடும்பங்கள் சிக்கியதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது

நிலைமையை கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மீட்பு முயற்சிகளை திறம்பட செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கியுள்ளேன்” என்றார்

இதுபற்றி பேசிய ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின், “பாசுகேதரில் பெய்த கனமழையால் நான்கு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இருப்பினும், யாரும் காணாமல் போகவில்லை. அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

கனமழை காரணமாக ருத்ரபிரயாக், பாகேஷ்வர், சாமோலி, ஹரித்வார் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை இன்று மூட அரசு உத்தரவிட்டுள்ளது.



Read More

Previous Post

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சஷீந்திர ராஜபக்ச! – ஐபிசி தமிழ்

Next Post

புரோ கபடி லீக் சீசன் 12 இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் | Pro Kabaddi League season 12 kicks off

Next Post
புரோ கபடி லீக் சீசன் 12 இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் | Pro Kabaddi League season 12 kicks off

புரோ கபடி லீக் சீசன் 12 இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் | Pro Kabaddi League season 12 kicks off

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin