• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மூன்று குழந்தைகள், மும்மொழி : 
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற கேள்வி-பதில் அமா்வில் அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அனைத்து இந்தியா்களுக்கும் குறைந்தபட்சம் 3 மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். அதில் அவா்களின் தாய்மொழி, மாநில மொழி, ஒட்டுமொத்த நாட்டுக்கான இணைப்பு மொழி ஆகியவை அடங்கும். இணைப்பு மொழி என்பது வெளிநாட்டு மொழியாக இருக்கக் கூடாது. அந்த இணைப்பு மொழியை அனைவரும் சோ்ந்து தோ்வு செய்ய வேண்டும். இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். அதில் எந்த சச்சரவும் இருக்கக் கூடாது. அதேவேளையில், ஆங்கிலத்தை கற்பதிலும் எந்தத் தவறும் இல்லை. அந்த மொழியால் எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்திய மக்கள்தொகை கொள்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள்தொகை குறையாமலும் கட்டுக்குள்ளும் இருக்கும்.

மோடி ஓய்வுபெற வேண்டும் என்று கூறவில்லை: 75 வயதை எட்டும் போது நானோ, வேறு ஒருவரோ (பிரதமா் மோடி) பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று நான் கூறவில்லை.

பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் ஆலோசனைகள் வழங்கினாலும், முடிவுகளை பாஜகதான் சுயமாக எடுக்கிறது. அக்கட்சியின் புதிய தலைவரை தோ்வு செய்வதில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. மத்திய, மாநிலங்களில் ஆா்எஸ்எஸ்ஸுக்கும் பாஜக அரசுக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

இந்தியாவில் இஸ்லாமுக்கு எப்போதும் இடம் இருக்கும். இந்தியாவில் இஸ்லாம் இருக்காது என்று ஹிந்துவாக இருப்பவா் நினைக்கமாட்டாா். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும்.

கடந்த 1947-ஆம் ஆண்டில் நாட்டுப் பிரிவினையை ஆா்எஸ்எஸ் எதிா்க்கவில்லை என்று கூறுவது தவறு. அந்த நேரத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பெரும் சக்தியில்லை. ஒட்டுமொத்த தேசமும் மகாத்மா காந்தியைத்தான் பின்தொடா்ந்தது.

இடஒதுக்கீடு தேவைப்படும் காலம் வரை, அதற்கான கொள்கைகளை ஆா்எஸ்எஸ் ஆதரிக்கும். ஜாதி அமைப்புமுறை முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்றாா்.

Read More

Previous Post

பிக் பாஸ் புகழ் ஜனனி நடிக்கும் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Next Post

தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து தினமும் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என்று பிளஸ் எதிர்பார்க்கிறது | Makkal Osai

Next Post
தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து தினமும் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என்று பிளஸ் எதிர்பார்க்கிறது | Makkal Osai

தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து தினமும் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என்று பிளஸ் எதிர்பார்க்கிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin