பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம், அந்த மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது. இதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிகார் மாநிலத்தில் வாக்கு அதிகாரம் எனும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், தர்பங்காவில் நடந்த பேரணி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் தேஸ்வி யாதவ் ஆகியோரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட மேடையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கங்கள் இட்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாய் குறித்து இழிவாக முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவத்தின் போது தலைவர்கள் யாரும் மேடையில் இல்லை என்றாலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸின் அரசியல் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஒரு ஏழைத் தாயின் மகன் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் அமர்ந்து, தனது தலைமையால் நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
बिहार के दरभंगा में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और उनकी स्वर्गीय माताजी के लिए कांग्रेस और आरजेडी के मंच से जिस प्रकार गालियों से भरी अभद्र भाषा का प्रयोग किया गया है, वह न केवल निंदनीय है, बल्कि हमारे लोकतंत्र को भी कलंकित करने वाला है।
राहुल गांधी के नेतृत्व में…
— Amit Shah (@AmitShah) August 28, 2025
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பீகாரின் தர்பங்காவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தொண்டர்கள் பயன்படுத்திய அவதூறான மற்றும் அநாகரிகமான மொழி கண்டனத்திற்குரியது. அது மட்டுமல்லாமல், இது நமது ஜனநாயகத்திற்கும் களங்கம் விளைவிக்கிறது.
ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸின் அரசியல் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஒரு ஏழைத் தாயின் மகன் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் அமர்ந்து, தனது தலைமையால் நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இது காங்கிரஸ் கட்சி தனது பழைய வழிகளுக்குத் திரும்பியுள்ளது என்பதையும், இதன் மூலம் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை எப்போதும் விஷமாக்கி வருவதையும் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் கண்ணியத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டனர். இது ஒவ்வொரு தாய்க்கும் ஒவ்வொரு மகனுக்கும் அவமானம். இதற்காக நாட்டின் 140 கோடி மக்களும் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
August 28, 2025 9:34 PM IST
“நமது ஜனநாயகத்திற்கு களங்கம்..” – பிரதமர் மோடியின் தாய்க்கு எதிராக இழிவு முழக்கமிட்ட காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி

