• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம்? உளவு தகவல் வெளியீடு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம்? உளவு தகவல் வெளியீடு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா,பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர் என அந்த மாநிலத்தின் காவல் தலைமையகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்க உறுப்பினர்களான ராவல்பிண்டி நகரை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட் பகுதியை சேர்ந்த அடில் உசைன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் ஆகிய 3 பேரை அடையாளம் கண்டுள்ளது.

அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் வரைபட விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனைத்து மாவட்ட காவல் தலைமைக்கும் பகிர்ந்து உள்ளது. இதுபற்றி வெளியான தகவலில், அவர்கள் 3 பேரும் நேபாள நாட்டின் வழியே பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். பீகார் மற்றும் நாடு முழுவதும் அவர்கள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பூர்னியா, கதிஹார், அராரியா மற்றும் கிஷன்கஞ்ச் என நேபாளம் மற்றும் வங்காளதேச நாடுகளுடன் எல்லையை பகிர கூடிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரும் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் காத்மண்டு நகருக்கு வந்து பின்னர், கடந்த வாரம் அராரியா வழியே பீகாருக்குள் நுழைந்துள்ளனர்.

பீகாரில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்திற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 20 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும்.

1,300 கி.மீ. தொலைவை கடந்து செல்லும் இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெறும். இந்த சூழலில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் ஊடுருவல் பற்றிய உளவு தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.



Read More

Previous Post

ட்ரம்ப் 50% வரி விதித்த ‘நிஜ’ காரணமும், இந்தியா செய்ய வேண்டியதும் என்ன? – ரகுராம் ராஜன் விவரிப்பு | Why is Trump targeting India with tariffs explained by Raghuram Rajan

Next Post

அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

Next Post
அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin