• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

முதல்முறையாக மனிதருக்கு சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி! | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
முதல்முறையாக மனிதருக்கு சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர் நாட்டிற்கு பயணம் செய்து, ஐக்கிய அமெரிக்காவிற்கு திரும்பிய நபருக்கு NWS என்ற தசை திசுக்களை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேரிலாந்தை சேர்ந்த அவருக்கு இந்த தொற்று கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் முதல்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

’நியூஸ் வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம்’ என்பது கால்நடைகள், வன விலங்குகள், செல்லப்பிராணிகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் காயங்களின் மீது முட்டையிடும் ஒருவகை ஈ. இந்த முட்டையில் இருந்து உருவாகும் புழுக்கள் உயிருள்ள திசுக்களை உண்ணுகின்றன. இதை மருத்துவ துறையில் புழு தொற்று என்கிறார்கள். இந்த வகை ஒட்டுண்ணி தொற்று பொதுவாக தென் ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் காணப்படுகிறது. அதேநேரம், இந்த தொற்று மனிதர்களை தாக்குவது அரிதானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதேநேரம், இந்த தொற்று மத்திய அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் வழியாக வடக்கு அமெரிக்கா நோக்கி பரவி வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரவலை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கடுமையாக போராடி வருகின்றன.

இந்த வகை தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவர்களுக்கு பரவாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரம், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், கால்நடைகள் அதிகமுள்ள இடங்களில் வசிப்பவர்கள், வெளிப்புற காயங்கள் உள்ளவர்களுக்கு இத்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காயம் ஏற்பட்ட இடத்தில் கடுமையான வலி, ஆறாத புண்கள், காயம் ஏற்பட்ட இடத்தில் துர்நாற்றம் வீசுதல், புண்களை சுற்றி புழுக்கள் காணப்படுதல் ஆகியவை இந்த தொற்றுக்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

NWS தொற்றில் இருந்து தப்பிக்க வெப்ப மண்டல பகுதிகளுக்கு செல்லும்போது, பூச்சிக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. காயங்கள் ஏற்பட்டால் சுத்தமாகவும், வெளியில் தெரியாத வகையில் மூடி பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை காயத்தில் புழுக்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சைகள் மூலம் புழுக்களை மருத்துவர்கள் அகற்ற வேண்டியிருக்கும். அதேநேரம், சுயமாக புழுக்களை அகற்ற முயற்சிக்க வேண்டாம் என என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனிடையே, அமெரிக்காவில் NWS புழு தொற்று பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 28, 2025 8:39 AM IST

Read More

Previous Post

மாத சம்பளம் பத்தலையா? ரூ.20,000 வரை சம்பாதிக்க சூப்பர் பார்ட் டைம் ஜாப் ஐடியாஸ்..! | வணிகம்

Next Post

நாட்டில் 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்: ஸ்டீவன் சிம் | Makkal Osai

Next Post
நாட்டில் 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்: ஸ்டீவன் சிம் | Makkal Osai

நாட்டில் 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்: ஸ்டீவன் சிம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin