இந்த தருணத்தில் என் அம்மா இருந்தால் என்ன செய்வார் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நீண்ட உரையாடலுக்கு பின் அழுதுகொண்டே நிலா விமானம் ஏறினார். எனினும், பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதால் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி அழுதுகொண்டே இருந்த நிலாவிடம் நாங்கள் அனைவரும் சொன்னது, ‘உன் பாட்டிக்கு ஒரு பதக்கம் வென்று கொடு’ என்பது தான். இப்போது, ஆசிய துப்பாக்கிச் சூடு சாம்பியன்ஷிப்பில் நிலா வெள்ளி வென்றுள்ளார். இதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதைத்தான், நாட்டிற்காக பதக்கங்களை வெல்வதை தான் என் என் அம்மா பார்க்க விரும்புவார் மாறாக அழுவதை அல்ல.” என்று நெகிழ்ந்திருக்கிறார்.


