Last Updated:
ஜம்மு & காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு, 14 பேர் காயம்.
ஜம்மு & காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு & காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் அங்குள்ள செனாப் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டோடா மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்தன. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் டாவி பாலம் சேதமடைந்தது.
ரேசி மாவட்டத்தில் உள்ள அஞ்சினாலா ஆற்றில் அபாய எல்லையை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல கிஸ்த்வார், கத்வா உள்ளிட்ட பகுதிகள் கனமழை, நிலச்சரிவால் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் யாத்ரீகர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைப்பேசி வாயிலாக பேசினேன். ஜம்மு & காஷ்மீரின் நிலைமையை எடுத்துரைத்தேன். குறிப்பாக ஜம்மு பகுதியில் கன மற்றும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்துள்ளேன்.
Just spoke to the Union Home Minister @AmitShah ji on the phone to brief him about the situation in J&K, especially Jammu province, where heavy & continuous rains have caused a lot of damage and disruption to normal life. Efforts are being made to restore phone/data connectivity…
— Omar Abdullah (@OmarAbdullah) August 26, 2025
துண்டிக்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய சேவையை விரைவில் மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு செல்ல நானும், அதிகாரிகளும் புறப்பட்டபோது அந்தப் பகுதியை அடையமுடியாமல் போனது. நாளை முதல் விமானத்தில் ஜம்மு செல்ல திட்டமிட்டுள்ளேன்.
அதேசமயம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். மேலும் அங்குள்ள குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Jammu and Kashmir
August 26, 2025 9:11 PM IST


