Last Updated:
லாம்டாபுட் பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக மக்காகுண்டா அணையில் இருந்து தோராயமாக 2,000 கன அடி நீரை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். மேலும், இது குறித்து அங்கு வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பெர்ஹாம்பூரைச் சேர்ந்த 22 வயதான சாகர் என்ற யூடியூபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் டுடுமா நீர்வீழ்ச்சியில் அவர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாகர் கட்டாக்கில் இருந்து தன்னுடைய நண்பர் அபிஜித் பெஹராவுடன் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு சுற்றுலா தலங்களை படம் பிடிப்பதற்காக கோராபுட் மாவட்டத்தில் அமைந்துள்ள டுடுமா நீர்வீழ்ச்சிக்கு (Duduma waterfalls) சென்றிருக்கிறார்.
இந்த நிகழ்வு சம்பவ நாளன்று மதியம் சாகர் நீர்வீழ்ச்சியில் இருந்துகொண்டு ஒரு ட்ரோன் கேமராவை பயன்படுத்தி படம் பிடித்துக் கொண்டிருந்தபோது நடந்திருக்கிறது. வெளியான அந்த வீடியோவில் சாகர் நீர்வீழ்ச்சியின் நடுவில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. மற்றவர்கள் கயிற்றை பயன்படுத்தி அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். எனினும், நீர்வீழ்ச்சியில் இருந்துவந்த வலிமையான நீரோட்டம் அவரை அடித்துச் சென்றுவிட்டது.
லாம்டாபுட் பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக மக்காகுண்டா அணையில் இருந்து தோராயமாக 2,000 கன அடி நீரை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். மேலும், இது குறித்து அங்கு வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனை அறியாமல் திடீரென்று ஏற்பட்ட நீரோட்டத்தை சாகரால் கையாள முடியாமல்போக, அவரை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது.
உள்ளூர்வாசிகளும், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அந்த இளைஞரை காப்பாற்றுவதற்கு போதுமான அளவு முயற்சிகளை எடுத்தாலும், அவர்களால் அதனை செய்ய முடியாமல் போனது. இது குறித்து மக்காகுண்டா காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்குவந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
“ODRAF மற்றும் தீயணைப்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த இளைஞர் பெர்ஹாம்பூரை சேர்ந்தவர். இங்கு சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார். இந்த நிகழ்வு நேற்று நடந்தது. இது குறித்து சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கோராபுட் சூப்பரண்டண்ட் ஆஃப் போலீஸ் மீடியாவிடம் கூறியுள்ளார். சமீபத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சாகரை மீட்பதற்கான தேடுதல் வேட்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
யூடியூபர்கள் தங்களுடைய யூடியூப் சேனலுக்கு சுவாரஸ்யமான வீடியோக்களைப் பதிவு செய்வதற்காக தங்களுடைய பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், இது மாதிரியான விபத்துகளில் மாட்டிக் கொள்வது இப்போது அதிகமாகி விட்டது. எனவே, இனியாவது யூடியூபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அனைவருடைய வேண்டுகோளாகவும் உள்ளது.
August 26, 2025 10:22 PM IST
ரீல்ஸ் எடுக்கச் சென்ற யூடியூபருக்கு நேர்ந்த சோகம்… நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற வீடியோ வைரல்…!


