Last Updated:
குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 20 இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
11வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கடைசியாக 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது, இதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்று சாதனை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடத்தப்படவுள்ளது.
வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 8 சுற்றுகளாக நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த தொடரில், 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 206 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 20 இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். எனினும், உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இந்த தொடரில் பங்கேற்பது உறுதியாகவில்லை.
August 26, 2025 8:43 PM IST


