Last Updated:
சீனியர் சிட்டிசன்களுக்கு FD-யில் 8.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் இருக்கும் பல சிறு நிதி வங்கிகள் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சில சிறு நிதி வங்கிகள் தங்கள் FD திட்டங்களில், சீனியர் சிட்டிசன்களுக் என்று பிரத்தியேகமாக 8.50% வரை FD-க்கு வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இந்த பிரத்யேக வட்டி விகிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன மற்றும் நிலையான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வை வழங்குகின்றன. சமீபத்தில் தான் தேசிய மூத்த குடிமக்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில் பின்வரும் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதன்படி, சீனியர் சிட்டிசன்களுக்கு FD-யில் 8.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 18 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் 2 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Suryoday சிறு நிதி வங்கியானது, 5 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு மூத்த குடிமக்களுக்கு 8.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 30 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சிறு நிதி வங்கியானது 888 நாள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-யில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.20 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கியானது மூன்று ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 4 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. வட்டி விகிதங்கள் ஜூலை 25, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
மூத்த குடிமக்களுக்குப் பொருந்தக்கூடிய FD முதலீடுகளுக்கான TDS விதிகள் ஏப்ரல் 1, 2025 முதல் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் வட்டி வருமானம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் FD முதலீடுகள் மீதான வரி கழிக்கப்படும் என்று சமீபத்திய சட்டம் கூறுகிறது.
வழக்கமான வங்கிகளை விட சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு, சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்வது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் குறிப்பிட்ட வங்கிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயர் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதும், அவர்களின் நிதி நோக்கங்கள் மற்றும் இடர் சகிப்புத்தன்மையை (risk tolerance) கருத்தில் கொள்வதும் முக்கியம்.
August 26, 2025 9:43 AM IST


