Last Updated:
Flower Price| நேற்றுவரை குறைந்த விலையில் விற்பனையான பூக்கள், இன்று ஆக:26-ம் தேதி திடீரென உச்சத்தை எட்டியுள்ளன.
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்தைவிடத் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்திப் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.
நேற்று வரை (ஆக.26-ம் )குறைந்த விலையில் விற்பனையான பூக்கள், இன்று ஆக.26-ம் தேதி திடீரென உச்சத்தை எட்டியுள்ளன. அதன்படி, ஒரு கிலோ மல்லி மற்றும் முல்லைப் பூக்கள் ₹1000-க்கும், ரோஸ், செவ்வந்தி, பட்டன் ரோஸ் ஆகியவை ₹480-க்கும் விற்பனையாகின்றன. அதேபோல, அரளிப்பூ மற்றும் சம்பங்கி பூக்களின் விலை ₹400 ஆக உள்ளது. கனகாம்பரம் ₹800-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால், பூ மாலைகள் தயாரிக்கும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு காரணமாக, பூக்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
August 26, 2025 2:45 PM IST

