• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பி.டி. உஷா மகனின் திருமணம்.. கேரள பாரம்பரியப்படி சேலை அணிந்து பங்கேற்ற மேரி கோம்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பி.டி. உஷா மகனின் திருமணம்.. கேரள பாரம்பரியப்படி சேலை அணிந்து பங்கேற்ற மேரி கோம்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 4:06 PM IST

மணமகனான பி.டி. உஷாவின் மகன் விக்னேஷ் உஜ்வால் ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறையில் பட்டம் பெற்றுள்ளார்

பி.டி. உஷா திருமணத்தில் பங்கேற்ற மேரி கோம்பி.டி. உஷா திருமணத்தில் பங்கேற்ற மேரி கோம்
பி.டி. உஷா திருமணத்தில் பங்கேற்ற மேரி கோம்

கேரளாவில் நடைபெற்ற பி.டி. உஷாவின் மகன் திருமணத்தில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கேரள பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து பங்கேற்றார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவின் தடகள லெஜெண்டாக கருதப்படும் பி.டி. உஷா தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இந்திய தடகள விளையாட்டு பிரிவில் பி.டி. உஷா ஏற்படுத்திய சாதனைகளுக்காக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பி.டி. உஷா இந்தியாவுக்காக ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்.

அவரது விளையாட்டுத் திறமை சர்வதேச அரங்கில் இந்திய தடகள வீரர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றைக்கும் தடகள துறையில் சாதிக்க விரும்பும் வீரர் வீராங்கனைகளுக்கு பி.டி. உஷா ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பி.டி. உஷாவின் மகனும் மருத்துவருமான விக்னேஷ் உஜ்வாலின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. கேரளாவில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பட்டுப்புடவை அணிந்து அதற்கு மேட்சிங் ஆக தங்க நகைகளுடன் கேரள பெண்ணை போல மாறி திருமணத்தில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட இட்லி, வடை, சாம்பார் உள்ளிட்டவற்றை ருசித்து மகிழ்ந்தார் மேரி கோம். அப்போது சிலர் அதிகம் சாப்பிட்டால் உங்களுடைய பிட்னஸ் என்ன ஆகும் என்று கேட்டுள்ளனர். அதற்கு இந்த சாப்பாடு அதிகம் கிடையாது நான் அளவோடு தான் சாப்பிட்டு உள்ளேன் என்று கிண்டலாக மேரி கோம் பதில் அளித்துள்ளார்.

மணமகனான பி.டி. உஷாவின் மகன் விக்னேஷ் உஜ்வால் ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது அவர் பி.டி. உஷா நடத்திவரும் தடகளத்திற்கான பள்ளியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 26, 2025 4:06 PM IST

Read More

Previous Post

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

Next Post

அடேங்கப்பா!! தஞ்சாவூர்ல மல்லிப்பூ ஆயிரமா? கிடுகிடு உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி… | வணிகம்

Next Post
அடேங்கப்பா!! தஞ்சாவூர்ல மல்லிப்பூ ஆயிரமா? கிடுகிடு உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி… | வணிகம்

அடேங்கப்பா!! தஞ்சாவூர்ல மல்லிப்பூ ஆயிரமா? கிடுகிடு உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin