Singapore TOTO: சிங்கப்பூர் டோட்டோவில் அடுத்த ஜாக்பாட் குலுக்கல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது, இந்த முறை முதல் பரிசு S$10 மில்லியன் என்ற பிரம்மாண்ட உச்சத்தை தாண்டும்.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஜாக்பாட் டோட்டோ குலுக்கல் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு நடைபெறும் என்று Singapore Pools தெரிவித்துள்ளது.
கடைசியாக ஆகஸ்ட் 18, 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடந்த மூன்று டிரா குலுக்களிலும் முதல் பரிசை யாரும் வெற்றிபெறவில்லை இதனால் பரிசுத் தொகை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் டோட்டோவை பொறுத்தவரை வெற்றி எண் எதுவென்று யாராலும் கணிக்க முடியாது, இருப்பினும் சிலர் அதற்கான வழிமுறை, டிப்ஸ்களை பயன்படுத்தி வாங்கும் எண்கள் சில நேரங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சிலர் பிறந்ததேதி, வாகன எண்கள், திருமண நாள் போன்ற அணுகுமுறைகளை பயன்படுத்தி டிக்கெட் எடுக்குகின்றனர். ஆனால், அது உறுதியாக வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.
இதற்கு முன்னர் அதிகம் வெற்றி பெற்ற எங்களை சேகரித்து அதனை தோராயமாக தேர்வு செய்யும் வாடிக்கையார்கள் அதிகம் என கூறப்படுகிறது. இதனை Hot எண்கள் என்று கூறுவர்.
தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!
அதேபோல, அதிகம் எதிர்பார்க்கப்பட்டு குறைவாகவே வெற்றி பெற்ற எண்களையும் சிலர் தேர்வு செய்கின்றனர். இதனை Cold எண்கள் என்று கூறுவர்.
மேலும் சிஸ்டம் தேர்வு செய்யும் QuickPick முறையில் பலர் வெற்றியை சுவைத்துள்ளனர்.
என்னவாக இருந்தாலும் லாட்டரி என்பது அதிஷ்டம் உள்ள நபர்களுக்கு விழும், எனவே அதில் அடிமையாகாமல் இருப்பது சிறந்தது.
Photo: Google Maps

