கோலாலம்பூர்:
உத்தரப் பிரதேச அரசு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில், பிரமாண்டமான ராமாயண மெழுகு அருங்காட்சியகத்தை (Ramayana-themed wax museum) அமைக்க உள்ளது.
இந்த அருங்காட்சியகம், 10,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இராமர், சீதா, லக்ஷ்மணன், அனுமான், சுக்ரீவன், ஜடாயு போன்ற முக்கியக் கதாபாத்திரங்களின், தத்ரூபமான 50 மெழுகுச் சிலைகள் இடம்பெறும்.
7.5 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், சீதையின் கடத்தல், அனுமனின் இலங்கை பயணம், ராமர் சேதுவைக் கட்டியது, இராவணனுடனான போர் போன்றப் பிரபலமான காட்சிகளை மிகத் தெளிவாகச் சித்தரிக்கும்.
இந்த அருங்காட்சியகத்தில், நவீன ஒலி-ஒளி விளைவுகள், பார்வையாளர்களைக் கவரும் அம்சங்களும் இடம்பெறும். அயோத்தியை ஒரு முக்கிய உலகளாவிய ஆன்மிக, கலாசார, வரலாற்று மையமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.




