• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகிறதா டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்…? உண்மை நிலவரம் என்ன…? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தியாவில் மீண்டும் அறிமுகமாகிறதா டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்…? உண்மை நிலவரம் என்ன…? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 4:33 PM IST

இந்தியா – சீனா உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ் போன்றவை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Rapid Read
News18News18
News18

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீன குறுவீடியோ தளம் டிக்டாக், மீண்டும் வரப்போகிறது என்ற ஊகங்களை கிளப்பும் வகையில் அதன் இணையதளம் சில யூசர்களுக்கு அணுகக் கூடியதாகியுள்ளது. அதேபோல், அலிபாபா குழுமத்தின் இ-காமர்ஸ் தளமான அலி எக்ஸ்பிரஸ் இணையதளத்தையும் தற்போது இந்தியாவில் அணுக முடிகிறது.

2020 ஜூன் மாதத்தில், தேசிய பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசு டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்தது. அப்போது ஷேரிட், மி வீடியோ கால், கிளப் ஃபேக்டரி, கேம் ஸ்கேனர் போன்ற பிரபலமான செயலிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. அந்தக் காலகட்டத்தில், சீனாவுடனான எல்லை மோதல்களால் இரு நாடுகளின் உறவு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

டிக்டாக் மீண்டும் வருகிறதா?

இப்போது, டிக்டாக் இணையதளம் மீண்டும் அணுகக்கூடியதாக இருப்பதால் டிக்டாக் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும், டிக்டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இந்தியா திரும்புவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சில பயனர்கள் இணையதளம் சீராக இயங்குகிறது எனக் கூறினாலும், மற்றவர்கள் குறிப்பிட்ட துணைப் பக்கங்கள் திறக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், டிக்டாக் இந்தியாவுக்கு படிப்படியாக மீண்டும் அறிமுகமாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், செயலி இன்னும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை.

புவிசார் அரசியல் மாற்றங்கள்

2020-ல் டிக்டாக் தடைசெய்யப்பட்டபோது, பைட் டான்ஸ் ஒரே இரவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்திய பயனர்களை இழந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தற்போது இந்த சூழல் மாறியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான 24 சுற்று பேச்சுவார்த்தைகள் எல்லை பதற்றங்களை ஓரளவுக்கு தணித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அலி எக்ஸ்பிரஸின் நிலை

அலி எக்ஸ்பிரஸ் இணையதளமும் இந்திய பயனர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிக்டாக் போலவே இங்கு பயன்பாடு கிடைக்கவில்லை, மாறாக இணையதளம் மட்டுமே செயல்படுகிறது. மொத்தத்தில், டிக்டாக் மற்றும் அலி எக்ஸ்பிரஸ் இணையத்தில் மீண்டும் தோன்றியிருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரும்வரை இது முழுமையான தீர்வாக இருக்காது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 25, 2025 4:33 PM IST

Read More

Previous Post

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

Next Post

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | US Open Tennis Djokovic Sabalenka in second round

Next Post
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | US Open Tennis Djokovic Sabalenka in second round

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | US Open Tennis Djokovic Sabalenka in second round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin