• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பென்ஷன் டிரான்ஸ்ஃபர் முதல் வித்டிரா வரை… சரியான படிவத்தை தேர்வு செய்வது எப்படி…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பென்ஷன் டிரான்ஸ்ஃபர் முதல் வித்டிரா வரை… சரியான படிவத்தை தேர்வு செய்வது எப்படி…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 6:40 PM IST

உங்களுடைய PF அக்கவுண்டில் இருந்து ஒரு அட்வான்ஸ் தொகையை எடுக்க நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் காம்போசிட் கிளைம் (ஆதார்) அல்லது காம்போசிட் கிளைம் (நான்-ஆதார்) படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Rapid Read
News18News18
News18

ஒருவேளை நீங்கள் எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPFO) மெம்பராக இருந்தால் உங்களுடைய பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்ப்பது முதல் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்றலாகும்போது அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்வது வரை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனினும் சரியான காரணத்திற்கு சரியான படிவத்தை பூர்த்தி செய்வது என்பது இங்கு முக்கியமான ஒரு விஷயமாக அமைகிறது. சரியான படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்காவிட்டால் உங்களுடைய கோரிக்கை செயலாக்கம் செய்யப்படாது.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது:

  • ஒருவேளை உங்களுடைய PF அக்கவுண்டில் இருந்து ஒரு அட்வான்ஸ் தொகையை எடுக்க நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் காம்போசிட் கிளைம் (ஆதார்) அல்லது காம்போசிட் கிளைம் (நான்-ஆதார்) படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஒருவேளை UAN போர்ட்டலில் உங்களுடைய ஆதார், வங்கி விவரங்கள் மற்றும் படிவம் 11 தகவல்கள் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டு இருந்தால் ஆதார் பதிப்பு சரியானதாக இருக்கும். இந்த சூழ்நிலையில் உங்களுடைய நிறுவனத்தின் கையெழுத்து இல்லாமல் நேரடியாக EPF அலுவலகத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
  • உங்களுடைய PF பேலன்ஸை LIC பாலிசிக்கு பயன்படுத்த நினைத்தால் நீங்கள் படிவம் 14 மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒருவேளை நீங்கள் 10 வருட சேவை காலத்தை பூர்த்தி செய்திருந்தால் பென்ஷன் பலன்களை கிளைம் செய்வதற்கு படிவம் 10D-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
  • சேவை காலத்தை பூர்த்தி செய்யாமலேயே நீங்கள் 58 வயதை அடைந்துவிட்டால் காம்போசிட் கிளைம் (ஆதார் அல்லது நான்-ஆதார்) படிவம் மூலமாக வித்ட்ராயல் பலன்களை கிளைம் செய்யலாம்.
  • ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறி, மற்றொரு நிறுவனத்தில் சேரும்போது படிவம் 13-ஐ சமர்ப்பிப்பதன்மூலம் பிராவிடண்ட் ஃபண்ட் பேலன்ஸை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
  • ஒருவேளை ஒரு மெம்பர் 58 வயதை அடைவதற்கு முன்பே சேவையில் இருக்கும்போது இறந்து போகும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தினர் படிவம் 20-ஐ பயன்படுத்தி இறுதி PF செட்டில்மென்டை கிளைம் செய்யலாம்.
  • மேலும், படிவம் 10D-ஐ பூர்த்தி செய்வதன் மூலம் மாத பென்ஷன் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் படிவம் 51F மூலமாக EDLI திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பலன்களை பெறலாம்.

ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறி, வேறொரு நிறுவனத்தில் பணிபுரியாமல் இருக்கும் பட்சத்தில்:

இது போன்ற சூழ்நிலையில் 2-மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு நீங்கள் பென்ஷன் ஃபண்டில் இருந்து ஒரு திட்ட சான்றிதழ் மற்றும் இறுதி PF செட்டில்மென்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மீண்டும் காம்போசிட் கிளைம் (ஆதார் அல்லது நான்-ஆதார்) படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதிலும், குறிப்பாக நீங்கள் 10-வருட சேவை காலத்தை பூர்த்தி செய்திருந்தால் இந்த படிவத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

சரியான படிவத்தை பயன்படுத்துவது உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, நீங்கள் சமர்ப்பிக்கும் PF கோரிக்கைகள் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பணத்தை வித்ட்ரா செய்வதற்கு, அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்ய விண்ணப்பிப்பதற்கு என்று குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ற படிவத்தை EPFO கொண்டிருக்கிறது. அதனை சரியாக தேர்ந்தெடுத்து, நிரப்பி சமர்ப்பிப்பது அவசியம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 25, 2025 6:40 PM IST

Read More

Previous Post

ஓப்பனராக 42 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: கேரளா கிரிக்கெட் லீக்! | Sanju Samson hits 42 ball century as an opener in kerala cricket league

Next Post

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு | Israel attack on Gaza hospital 20 killed including 5 journalists

Next Post
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு | Israel attack on Gaza hospital 20 killed including 5 journalists

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு | Israel attack on Gaza hospital 20 killed including 5 journalists

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin