தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான தோவாளை மலர்ச் சந்தைக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், தோவாளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. தோவாளை சந்தையிலிருந்து தினமும் திருவனந்தபுரம் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் வாங்கிச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் நாளை தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. நேற்று பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், மல்லி கிலோ ரூ.500க்கும், முல்லை கிலோ ரூ.1500க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று, பிச்சிப் பூ கிலோ ரூ. 2500, மல்லிகைப் பூ கிலோ 700, அரளிப் பூ கிலோ ரூ.350, வாடாமல்லி கிலோ ரூ.80, கேந்தி கிலோ ரூ.170, சம்பங்கி கிலோ ரூ.250, முல்லைப் பூ கிலோ ரூ.2000, ரோஸ் கிலோ ரூ.180, ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.250, துளசி கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தாமரைப் பூ ஒன்று ரூ.5, மரிக்கொழுந்து கிலோ ரூ.150, செவ்வந்தி கிலோ ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு, கேரளாவில் விசு கனி காணும் பண்டிகை நடைபெற உள்ளதால் தோவாளை சந்தையில் பூக்கள் விலை திடீர் என உயர்ந்துள்ளன.
இதுகுறித்து உள்ளூர் வியாபாரி தெரிவிக்கையில், “தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கேரளாவில் விசு கனி காணும் நிகழ்வு கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகம் இருக்கிறது. மேலும், பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை இப்பொழுது அதிகரித்து இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் உள்ளூரிலிருந்து பூக்கள் வரத்துக் குறைவாகவே உள்ளது. வெளியூரிலிருந்து வரும் பூக்களும் அப்பகுதிகளின் தேவை அதிகரித்துள்ளதால் சந்தைக்குக் குறைவாக வந்துள்ளது. அதனால் இந்த விலையேற்றம் சிறிது நாட்கள் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)