ஈரான் அணுசக்தி விவகாரம்
2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை குறைத்தது. அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டது.
ஆனால் 2018-ல், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அதனால், ஈரான் மீது மீண்டும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில்தான் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது.
இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
அயதுல்லா அலி கமேனிதற்போதைய நிலை:
ஈரான், தனது அணுசக்தி திட்டம் சிவில் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என உறுதியாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், IAEA (அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு) தற்போது ஈரானில் கண்காணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், `ஆகஸ்ட் 31-க்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், “Snapback” என்ற நடைமுறை மூலம் ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வரும்” என ஈரானை எச்சரித்திருக்கும் ஐ.நா, ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

