• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி கண்காணிக்க வேண்டுமா…? அதன் அவசியம் என்ன தெரியுமா…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி கண்காணிக்க வேண்டுமா…? அதன் அவசியம் என்ன தெரியுமா…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 5:59 PM IST

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்ப்பது என்பது மிகவும் எளிமையான காரியம். பேங்க் அப்ளிகேஷன்கள், டிஜிட்டல் பேமெண்ட் அப்ளிகேஷன்கள் அல்லது வெப்சைட்டுகள் மற்றும் இந்தியாவின் நான்கு முன்னணி கிரெடிட் பியூரியாக்களின் வெப்சைட்டுகளில் இருந்து நேரடியாக அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Rapid Read
News18News18
News18

நம்மில் பெரும்பாலானோர் நம் உடல் ஆரோக்கியம் குறித்து அப்டேட்டாக இருப்பதற்கு போன்களில் ஹெல்த் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது, ஸ்மார்ட் ரிங் அல்லது வாட்ச் அணிந்து கொள்வது போன்றவற்றை செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை நபர்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை வழக்கமான முறையில் கண்காணிக்கிறோம்? நிச்சயமாக பெரும்பாலானோர் இதை செய்வது கிடையாது.

வீட்டுக் கடன் அல்லது கார் கடன் போன்ற பல்வேறு விதமான கடன்களை பெற்றிருப்பவர்கள் கூட தங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை பார்த்ததே கிடையாது என்பதே இதில் ஆச்சரியமான விஷயம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்ப்பது என்பது மிகவும் எளிமையான காரியம். பேங்க் அப்ளிகேஷன்கள், டிஜிட்டல் பேமெண்ட் அப்ளிகேஷன்கள் அல்லது வெப்சைட்டுகள் மற்றும் இந்தியாவின் நான்கு முன்னணி கிரெடிட் பியூரியாக்களின் வெப்சைட்டுகளில் இருந்து நேரடியாக அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு லோன் ரிஜெக்ட் ஆகும்வரை அல்லது குறைவான கிரெடிட் ஸ்கோர் காரணமாக அதிக வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கும் வரை நம்மில் பெரும்பாலானோர் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்ப்பது கிடையாது. ஆனால், உண்மையில் உங்களுடைய கடனுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் வாங்கும் கடனானது உங்களுடைய பொருளாதார நிலைத்தன்மையில் தாக்கத்தைக் கொண்டுள்ளது.

அதில் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கிரெடிட் ரிப்போர்ட் என்பது கடன் வழங்குனர்களுக்கான வெறும் ஒரு கருவி கிடையாது. வேலைவாய்ப்புகள், பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் மற்றும் நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி; சில சமயங்களில் இது மேட்ரிமோனி மற்றும் டேட்டிங் பிளாட்ஃபார்ம்களில் கூட பயன்படுத்தப்படுகிறது. இது உங்களுடைய பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. எனவே உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை எப்படி சரிபார்ப்பது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கிரெடிட் பியூரியாக்கள் மூலமாக:

இந்தியாவின் ஏதாவது ஒரு கிரெடிட் பியூரியாவின் வாடிக்கையாளர் பிரிவுக்கு லாகின் செய்யுங்கள். உங்களுடைய அடையாள விவரங்களைப் பயன்படுத்தி உங்களுடைய ரிப்போர்ட்டை நீங்கள் பெறலாம். ஒவ்வொரு பியூரியாக்களும் கட்டாயமாக வருடத்திற்கு ஒருமுறை ஒரு இலவச ரிப்போர்ட்டை வழங்க வேண்டும் என்பது விதிமுறை.

வங்கி அப்ளிகேஷன் மூலமாக:

பல வங்கிகள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் மூலமாக கிரெடிட் ரிப்போர்ட்டை வழங்குகின்றன.

பேமெண்ட் மற்றும் பிற பொருளாதார பிளாட்ஃபார்ம்கள்

கிரெடிட் ரிப்போர்ட் என்பது நீங்கள் வாங்கிய கடன்கள், கடனை திருப்பி செலுத்திய வரலாறு மற்றும் உங்களுடைய கடன் நடத்தை போன்ற உங்களுடைய கடன் பயணத்தின் ஒரு விரிவான தகவலை வழங்குகிறது. அதில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரும் சேர்க்கப்பட்டிருக்கும். மேலும், கிரெடிட் ரிப்போர்ட்டில் உங்களுடைய பெயர், தொடர்பு விபரங்கள் மற்றும் முகவரி போன்ற தகவல்களும் அடங்கி இருக்கும்.

இதையும் படிங்க: பிரீபெய்டு கார்டுகள் vs கிரெடிட் கார்டுகள்… டீனேஜர்களுக்கு எது பாதுகாப்பானது…?

கிரெடிட் ரிப்போர்ட்டை வழக்கமான முறையில் கண்காணிப்பதன் மூலம், அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக அதனை சரிபார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியமான பற்களுக்கு பல் மருத்துவரை அணுகுவது அல்லது ஆரோக்கியமான உடலுக்கு ஜிம்மிற்கு செல்வதுபோல உங்களுடைய பொருளாதார சுய பராமரிப்பின் ஒரு பகுதியாக கட்டாயமாக உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை ஆய்வு செய்வது அவசியம். எனவே, இனியாவது உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை அடிக்கடி சரிபார்க்கும் பழக்கத்திற்கு வாருங்கள்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 25, 2025 5:59 PM IST

Read More

Previous Post

“தமிழ் தலைவாஸ் முதல் முறையாக கோப்பையை வெல்வதே எங்கள் ஒரே குறிக்கோள்”: அர்ஜுன் தேஷ்வால் பேட்டி | விளையாட்டு

Next Post

காசா போர் நிறுத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி மெலனியா டிரம்புக்கு துருக்கி அதிபரின் மனைவி கடிதம் | Makkal Osai

Next Post
காசா போர் நிறுத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி மெலனியா டிரம்புக்கு துருக்கி அதிபரின் மனைவி கடிதம் | Makkal Osai

காசா போர் நிறுத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி மெலனியா டிரம்புக்கு துருக்கி அதிபரின் மனைவி கடிதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin