• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஃபிக்ஸட் டெபாசிட்டை எமர்ஜென்சி ஃபண்டாக கருதலாமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஃபிக்ஸட் டெபாசிட்டை எமர்ஜென்சி ஃபண்டாக கருதலாமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 7:38 AM IST

பலர் அவசர சூழ்நிலைகளுக்கு உதவுமே என்ற எண்ணத்தில் தங்களுடைய பணத்தை ஃபிக்சட் டெபாசிட்களில் டெபாசிட் செய்கின்றனர்.

News18News18
News18

ஃபிக்சட் டெபாசிட்கள் என்பது வங்கிகள் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பங்குச் சந்தைகளைப் போல அல்லாமல் ஃபிக்சட் டெபாசிட் என்பது முதலீட்டாளர்களுக்கு மெச்சூரிட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட ஒரு ரிட்டனை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஃபிக்சட் டெபாசிட்கள் என்பது மிகவும் பிரபலமான முதலீட்டு ஆப்ஷனாக அமைகிறது. 

பலர் அவசர சூழ்நிலைகளுக்கு உதவுமே என்ற எண்ணத்தில் தங்களுடைய பணத்தை ஃபிக்சட் டெபாசிட்களில் டெபாசிட் செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஒரு அவசரத்திற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை டெபாசிட் செய்வது நல்ல யோசனையாக இருக்குமா? சமீபத்தில் நிதின் கௌஷிக் என்ற சார்டட் அக்கவுண்டன்ட் ஃபிக்ஸட் டெபாசிட்களில் எமர்ஜென்சி ஃபண்டை சேமித்து வைப்பதால் ஏற்படக்கூடிய எதிர்பாராத பொருளாதார இழப்புகள் குறித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் ஒரு பெண் மருத்துவ அவசரத்திற்காக தன்னுடைய ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பில் இருந்த பணத்தை எடுக்க முயன்ற போது 25,000 ரூபாயை இழந்ததாக கௌஷிக் கூறியுள்ளார்.

அவரிடம் 4 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகள் இருந்துள்ளது. அவை அனைத்துமே மெச்சூரிட்டி அடைவதற்கு கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு அவசரமாக செய்யப்பட வேண்டிய ஒரு அறுவை சிகிச்சையின் காரணமாக பணத்தை புரட்டுவதற்கு அந்தப் பெண் தன்னுடைய ஃபிக்சட் டெபாசிட் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், அவ்வாறு அவர் முன்னதாக பணத்தை வித்டிரா செய்வதால் ஏற்பட்ட செலவு என்பது கிட்டத்தட்ட 25,000 ரூபாயாக இருந்துள்ளது. பணத்தை முன்கூட்டியே செய்ததற்கான வட்டி விகிதங்கள், ஒப்பந்த விகிதத்தில் 0.5 – 1% சதவீத அபராதம் மற்றும் அடுத்த 2 வருடங்களில் கிடைக்கக்கூடிய கூட்டு வட்டி பலன் போன்றவை அவருக்கு சேர வேண்டிய பணத்தில் இருந்து கழிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: சிலிண்டருக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கா? சிலிண்டரின் மேல் எழுதப்பட்டிருக்கும் இந்த எண்களின் அர்த்தம் என்ன தெரியுமா?

எனவே, எப்பொழுதுமே அவசர சூழ்நிலைகளுக்கு உதவுமே என்பதற்காக ஃபிக்சட் டெபாசிட்களில் பணத்தை டெபாசிட் செய்வது நல்ல ஒரு யோசனையாக இருக்காது. தனியாக ஒரு சேமிப்பு கணக்கை துவங்கி 6 மாத செலவுகளை அந்த அக்கவுண்டில் முதலீடு செய்வது சிறந்த யோசனையாக இருக்கும். மேலும் மெடிக்கல் கிரெடிட் கார்டு அல்லது இன்சூரன்ஸ் டாப் அப் போன்றவற்றை ஒரு பேக்கப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கௌஷிக் பரிந்துரை செய்கிறார். “எமர்ஜென்சி ஃபண்ட் என்பது உங்களுக்கு மன நிம்மதியை தரக்கூடிய ஒன்றே தவிர லாபத்துக்கானது அல்ல”, என்று கௌஷிக் கூறியுள்ளார். எனவே எமர்ஜென்சி ஃபண்ட் என்பது கூடுதல் இழப்புகளை ஏற்படுத்தாமல் எதிர்பாராத செலவுகளை சமாளிப்பது என்பது உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 25, 2025 7:38 AM IST

Read More

Previous Post

RCB : மீண்டும் ஆர்.சி.பி. அணிக்கு திரும்பும் ஏ.பி. டிவில்லியர்ஸ்? உற்சாகத்தில் ரசிகர்கள்.. | விளையாட்டு

Next Post

நாய்களுடன் அறை வசதி – விருந்தினர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் சீன ஹோட்டல்!

Next Post
நாய்களுடன் அறை வசதி – விருந்தினர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் சீன ஹோட்டல்!

நாய்களுடன் அறை வசதி – விருந்தினர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் சீன ஹோட்டல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin