Last Updated:
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளம் பாலங்கள், வாகனங்கள், குடியிருப்புகளை அடித்துச் சென்றது.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், பாலங்கள், வாகனங்கள், குடியிருப்புகள் என வழியில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம், சிம்லா, லாஹௌல், ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாகவும் மேக வெடிப்பு காரணமாகவும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், கன்வி ரவைனில் உள்ள காவல் நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. சிம்லாவில் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்தது. அதன் அருகே இருந்த கடைகள் சேதமடைந்தன.
லாஹௌல், ஸ்பிட்டி மாவட்டங்களையொட்டி மாயாத் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, கார்பத், சங்குட், உட்கோஸ் நாலா அருகே பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கார்பத் கிராமம் ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்த நிலையில், இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
மேலும், சிம்லா, லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
Himachal Pradesh
August 14, 2025 3:28 PM IST


