Last Updated:
சாலையில் பள்ளம் இருந்த நிலையில் அதிலிருந்து ஒதுங்கிச் செல்வதற்காக இடதுபக்கத்தில் அவர் செல்லத் தொடங்கினார்
சாலை விபத்தில் சிக்கி கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பரீத் உசைன். உள்ளூர் போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி பரீத் உசைன் ஜம்மு நகரில் உள்ள சுஞ்ச்வான் பகுதியில், சஞ்சய்கர் என்ற இடத்தில் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
சாலையில் பள்ளம் இருந்த நிலையில் அதிலிருந்து ஒதுங்கிச் செல்வதற்காக இடதுபக்கத்தில் அவர் செல்லத் தொடங்கினார். அப்போது முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவை உள்ளே இருந்தவர் திறந்தார்.
அப்போது அந்த கதவு பரீத் உசைனின் தலையில் பட்டது. அவர் வேகமாக வந்து கொண்டிருந்ததால் மிகுந்த பலத்துடன் கார் கதவு பரீத் உசைனை தாக்கியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
August 25, 2025 12:24 PM IST


