தோ பாயோவில் நடந்த சண்டையைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மோதலில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் தேடும் முயற்சிகள் நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பெண்ணை துபாய்க்கு கடத்தி தவறான தொழில் ஈடுபடுத்திய வெளிநாட்டு நபர்
லோரோங் 7, தோ பாயோவின் 10B புளாக்கில் நடந்த இந்த மோதல் சம்பவம் குறித்து காலை 9:50 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியில் 10க்கும் மேற்பட்டோர் மேஜைகள், நாற்காலிகள் கொண்டு வீசி மோதிக்கொள்வதை காணமுடிந்தது.
சம்பவம் நடக்கும் இடம் தோ பாயோ தொழிலியல் பூங்காவில் உள்ள உணவகம் போல் தெரிகிறது.
உணவகத்தில் இருந்து குறைந்தது எட்டு பேர் அருகில் உள்ள குடியிருப்பை நோக்கி ஓடுவதையும் காணொளியில் காண முடிந்தது.
Video: https://www.instagram.com/p/DNxDk1OXKc4/
இந்த சம்பவத்திற்குப் பிறகு கண்ணாடிகள் உடைந்து தரையில் சிதறிக் கிடந்ததாகவும், சில நாற்காலிகளில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
தரையில் கத்தி மற்றும் காலணிகள் காணப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
சக ஊழியரிடம் அத்துமீறிய ஊழியர் – 26 மாத சிறை, 6 பிரம்படி விதிப்பு

